15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம்

திமுக அர­சுக்கு எதிர்ப்புத்தெரி­வித்து, வரும் 15ஆம் தேதி மாநி­லம் தழு­வியள­வில் போராட்­டம் நடத்த இருப்­ப­தாக தமி­ழக பாஜக அறி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் பால்விலையை பார்த்­தால் கண்­கள் இருண்டு போவ­தாக தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

முதன்­மு­றை­யாக தமி­ழக பாஜக மண்­டல அள­வில்போராட்­டம் நடத்­தப்போவ­தாக அறி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து போராட்­டம் வெற்­றி­பெ­று­வதை உறுதிசெய்ய ­கட்சி நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

“திமுக ஆட்சிஅமைந்­தால் விடி­யலை தரு­கி­றோம் என்று சொல்­லி­விட்டு, பால்விலையை உயர்த்தி உள்ளது திமுக அரசு. இது­தான் மக்­கள் விடி­ய­லுக்­குத்தரும் விலையா?

“தமி­ழக அர­சின் ‘ஆவின்’ பால் வழங்­கும் நிறு­வ­னம், அதன் நிர்­வாகச் சீர்­ கேட்­டி­னால், நஷ்­டத்­தில் நடத்­தப் ­ப­டு­கிறது. தவ­றான நடை­மு­றை­யால் ஏற்­படும் வரு­வாய் இழப்பை மக்கள் தலை­யில் சுமத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது,” என்று அண்­ணா­மலை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­ துள்­ளார்.

ஏற்­கெ­னவே வீட்டுவரி உயர்வு, சொத்து, தண்­ணீர், கழி­வு­ நீர் வரி ஆகி­ய­வற்­று­டன் மின்­கட்­­ணத்­தை­யும் பத்­தி­ரப்பதி­வுக் கட்­ட­ணத்­தை­யும் தமி­ழக அரசு தாறு­மா­றாக உயர்த்திஉள்­ள­தா­க குறிப்­பிட்­டுள்ள அவர், தற்­போது பச்­சி­ளம் குழந்­தை­க­ளுக்கு பயன் ­படும் பாலுக்­கான விலை­யை­யும் உயர்த்தி இருப்­பது, வாக்­க­ளித்த தமி­ழகமக்­களை வஞ்­சிக்­கும் செயல் எனச் சாடியு ள்­ளார்.

“அத்­தி­யா­வ­சிய பொருள்­களின் விலை­கள் எல்­லாம் ஏறு­மு­க­மாக உள்ளநிலை­யில், தமி­ழக மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மட்­டும் இறங்குமுகத்­தில் உள்­ளது. பால் விலையை உயர்த்தி, மக்­களை துன்­பப்­ப­டுத்­து­கிறது தி­முக அரசு,” என்று அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார். இதற்­கி­டையே, முதல் முறை­யாக, பாஜக சார்­பில் தமி­ழ­கத்­தில் மண்­டலள­வில் போராட்­டம் நடை­பெ­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழக பாஜக தலை­வ­ராக அண்­ணா­மலை பொறுப்­பேற்ற பின்­னர், மாநி­லம் தழு­விய அள­வில் சுமார் 1,200 மண்­ட­லங்­க­ளை­யும் உட்­ப­டுத்தி, போராட்­டம் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­முறை அதிகக்கூட்­டத்தை திரட்­டிகாட்­டும் மண்­ட­லத் தலை­வர்­களை பிர­த­மர் மோடி நேரில் சந்­திப்­பார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் பாஜக நிர்­வா­கி­கள் முழுவீச்­சில் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...