திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம்

‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர். இது​போன்ற தீவிர​வாதத்​தின் புது​முகத்தை எதிர்த்து எப்​படி போராட போகிறோம்​?’’ என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சித்​துள்​ளார்.

காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, பாகிஸ்​தானியர்​களின் அனைத்து வித​மான விசாக்​களை​யும் மத்​திய அரசு ரத்து செய்​தது. அத்​துடன் இந்​தி​யாவை விட்டு வெளி​யேற உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், தீவிர​வாதத்​தின் புது​முக​மாக திரு​மணம் இருக்​கிறது என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சனம் செய்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நிஷி​காந்த் கூறுகை​யில், ‘‘திரு​மணத்​தின் மூலம் மட்​டும் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பாகிஸ்​தான் பெண்​கள் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர். அவர்​களுக்கு இன்​னும் இந்​திய குடி​யுரிமை வழங்​கப்​பட​வில்​லை. இது​போல் திரு​மணம் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வரும் பாகிஸ்​தான் பெண்​களின் எண்​ணிக்கை அதி​கரிப்​பது, தீவிர​வாதத்​தின் புது​முக​மாக தெரி​கிறது. இதை எதிர்த்து நாம் எப்​படி போராட போகிறோம். இந்த விஷ​யம் மிக​வும் கவலை அளிக்​கிறது’’ என்று விமர்​சித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், அட்​டாரி எல்​லை​யில் இந்​திய அதிகாரி அருண்​பால் நேற்று கூறியதாவது:பாகிஸ்​தானியர்​களுக்கு வழங்​கப்​பட்ட தூதரக, நீண்ட கால, அலு​வல் ரீதியி​லான விசாக்​களை தவிர்த்து மற்ற சிறப்பு விசாக்​கள், குறுகிய கால விசாக்​கள் அனைத்​தை​யும் மத்​திய அரசு கடந்த 27-ம் தேதி ரத்து செய்​தது. அதன்​பின் கடந்த 3 நாட்​களில் மட்​டும் இந்​தி​யா​வில் இருந்து 537 பாகிஸ்​தானியர்​கள் வெளி​யேறி உள்​ளனர். அதே கால கட்​டத்​தில் பாகிஸ்​தானில் இருந்து இந்​தி​யர்​கள் 850 பேர் நாடு திரும்பி உள்​ளனர். கடந்த ஞாயிற்​றுக்​கிழமை மட்​டும் 237 பாகிஸ்​தானியர்​கள் இந்​தி​யா​வில் இருந்து வெளி​யேறினர். 116 இந்​தி​யர்​கள் நாடு திரும்​பி உள்​ளனர்​.இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.