இளைஞர்களின் திறமைக்கு வழிவகுப்பதே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் -மோடி

“நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது மிகவும் அவசியமானது. அதற்கான பொறுப்பு நாட்டின் கல்வி முறைக்கு உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளில் பணியாற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன ஆணையை, பிரதமர் மோடி நேற்று வழங்கினார்.

‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பது அவசியம். அதற்கான பொறுப்பு நம் கல்வி முறைக்கு உள்ளது. எனவே தான் புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு நவீன கல்வி முறையின் அவசியத்தை தேசம் பல ஆண்டு களாக உணர்ந்துள்ளது.
தேசிய கல்வி கொள்கையின் வாயிலாக நம் தேசம் அந்த திசை நோக்கி நகர துவங்கியுள்ளது. முன்னர், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, கல்வி முறை பெரும்பாலும் மாணவர்களுக்கு சுமையாக இருந்தது. ஆனால் இப்போது அது புதிய வாய்ப்புகளையும், விருப்பங்களையும் வழங்குகிறது.
கிராமப்புறங்களில் இருந்து வரும் தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூக மாணவர்களுக்கு கல்வி கற்பதில் மொழி மிகப்பெரிய தடைக்கல்லாக இருந்தது. தற்போது, தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படுவதுடன், அதிலேயே தேர்வு எழுதவும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிக்கான தேர்வுகளை மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, 13 மொழிகளில் எழுத வாய்ப்பளிக்கப்படுகிறது. எல்லைப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை கிடைப்பதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், 50,000 இளைஞர்களுக்கு மத்திய ஆயுதப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின், ‘கோபர்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், பசும் சாண உயிர் வாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர். பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

இன்றைக்கு பணி நியமன ஆணை பெற்றவர்களில், பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். நீங்கள் பெற்றுள்ள வெற்றி பல பெண்களுக்கு ஊக்கமாக அமையும். பல பள்ளிகளில், பெண்களுக்கு தனி கழிப்பறை இல்லாததால், பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். துாய்மை இந்தியா திட்டத்தால் அந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அரசு திட்டங்களில் நேரடியாக பலன் அடைவதற்காக, 30 கோடி பெண்களுக்கு, ‘ஜன் தன்’ கணக்கு துவங்கப்பட்டுள்ளது. ‘முத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கு உத்தரவாதமின்றி கடன் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...