கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் இணை பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் , இளம்வயதில் ஒருவர் ஒருமாநிலத்தின் சட்டசபை பொது தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை பலருக்கு கொடுத்து இருக்கும் வேலையில் , இதன் பின்னணியில் பாஜகபோட்ட கணக்குகளை பிரபல இளம் அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் கணக்கிட்டு கூறி இருக்கிறார் அதில்,

கர்நாடக சட்டமன்ற தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப் பட்டுள்ளார்.இந்த நியமனம் வெறும் கௌரவப்பதவி இல்லை.கிட்டத்தட்ட போர்படைத்தளபதியை போல பணி செய்ய வேண்டிய நிர்பந்தமிருக்கும் பொறுப்பாகும்..

கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்து விடும் என்ற கடும் பிரச்சாரத்தை முறியடித்து,மிக மிக நுணுக்கமான செயல்பாடுகள் வழியே மீண்டும் அதிகாரத்தை தக்க வைக்க பாஜக எடுத்துக்கொண்ட முக்கியமான ஆயுதம் அண்ணாமலை..

கல்யாண(hydrabad) கர்நாடகா – கித்தூரு(mumbai) கர்நாடகா – மத்திய கர்நாடகா – காரவளி(Coastal) கர்நாடகா – தென் கர்நாடகா – பெங்களூர் என ஆறு பிரிவுகளாகவும் 31 மாவட்டங்களாகவும் கர்நாடக மாநிலம் உள்ளது.

இந்தமுறை ஒருங்கிணைந்த வடக்கு கர்நாடக பகுதியான கித்தூரு மற்றும் கல்யாண கர்நாடகங்களில் பாஜக தன் தொகுதிகளை தக்கவைக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் ஒரு 50 தொகுதிகளை பாஜக வென்றால்தான் அதனால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிர்பந்தம் உள்ளது.

வடக்குகர்நாடக பகுதியில் இந்தமுறை பாஜகவை வீழ்த்துவதை கண்ணும் கருத்துமாக செய்ய சித்தராமய்யா காத்திருக்கிறார்.வடக்கு கர்நாடக பகுதியில் சித்தராமய்யாவின் செல்வாக்கு வலுவாக ஓங்கியுள்ளது.

தான் போட்டியிடும் கோலார் பகுதியில் எதிரியேஇல்லாமல் இருப்பதாலே வடக்கு கர்நாடக பகுதியில் தன் கவனத்தை முழுமையாக வைக்க முடிகிறது சித்துவால் என்கிற அரசியல் பார்வைநியாயமானது.

அதே சமயம் அங்கே பெல்காவி போன்ற மாவட்டங்களில் அண்ணாமலையின் புகழ் உச்சத்தில்உள்ளது.காரணம் தாதா பன்னஞ்ஞே ராஜாவை மொராக்கா வரை சென்று கைதுசெய்து வந்தது திரு.அண்ணாமலை அவர்கள்தான்.

மிகக்கொடூரமான,தாவூத்தின் முன்னாள் கூட்டாளியான பன்னஞ்சே ராஜாவை அவர் வேட்டையாடியதும்,பாஜக மாநிலத் தலைவரான பிறகும் அவனுக்கு எதிராக அவர் சென்றவருடம் சாட்சி சொன்னதும்கூட மக்களிடையே வெகுபிரபலம்..இப்படி நேர்மை மற்றும் வீரத்தின் அடையாளமாக அங்கே மக்களிடம் உள்ளார் திரு.அண்ணாமலை..

இந்த முறை கோலார் தொகுதியைவிட்டு சித்தராமய்யா நகரவே கூடாது என்கிற யுக்தியோடுதான் அண்ணாமலை களமிறங்குகிறார்.இதுபோல பல முக்கியமான காங்கிரஸ் செயல்பாட்டாளர்கள் தங்கள் தொகுதிகளைவிட்டு வெளியே வராமல் தேக்கி நிறுத்தும் யுக்தியுடனும் கர்நாடகா செல்கிறார் அண்ணாமலை..

எடியூரப்பாவின் வலிமையான கோட்டையான மத்திய கர்நாடகத்திலும் பாஜக தன்தொகுதிகளை தக்கவைக்க பாடுபடவேண்டும்.பெங்களூருக்குள் உள்ள 32 தொகுதிகளில் பாதிக்குபாதி தொகுதிகளை வெல்ல வேண்டும்.

கடலோர கர்நாடகம் ஹிந்துத்துவ கோட்டையாக இருந்தாலும் இந்தமுறை பல சிக்கல்களை அங்கே பாஜக சந்திக்கிறது.பாஜகவிற்கு சாதகமான பல தொகுதிகள் சில ஆயிரம் சொற்ப வாக்குகளில் அவற்றை இழக்கநேரிடும் அபாயம் உள்ளது.அண்ணாமலையின் வலிமையான செல்வாக்குள்ள பகுதிகளாக கடலோர மாவட்டங்கள் உள்ளன..

எந்த நேரமும் கலவரம் வரலாம்,அமைதியின்மை உருவாகலாம் என்றிருக்கும் கடலோர மாவட்டங்களில் மிகப்பெரியமாற்றங்களை உண்டு செய்த மக்களிடையே புகழ்பெற்றார் திரு.அண்ணாமலை.உத்தர மற்றும் தக்ஷிண கன்னட மக்களின் அன்பைபெற்றவர்.

ஆகவே,இளைஞர்கள் மத்தியில் சூழ்ந்துள்ள நம்பிக்கையின்மையை சரி செய்ய,அண்ணாமலையின் இமேஜை பாஜக பயன்படுத்திக் கொள்ளவே அவரை பொறுப்பாளராக ஆக்கியுள்ளது.

ஒருங்கிணைந்த கர்நாடகா முழுக்கவும் கட்சிசார்பற்ற இளைஞர்களையும் பாஜக பக்கம்திருப்ப வேண்டிய தேவையுள்ளது.ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டுப் படுத்தி,இந்துத்துவ அரசியலை வளர்ச்சியோடு இணைத்துப் பேசி பிரச்சாரம்செய்ய அண்ணாமலையின் வியூகம் அங்கே தேவைப்படுகிறது.

கர்நாடகாவை பொறுத்த வரை 200 தொகுதிகளில் ஒருசினிமா நாயகனுக்கு இருக்கும் மரியாதை அண்ணாமலைக்கு உள்ளது.காங்கிரஸிற்கு எதிராக கன்னடமொழியில் அவர் செய்யும் பிரச்சாரங்கள் மக்கள்த்தியில் எடுபடும் என்பதாலே அவரை பொறுப்பாளராக நியமிப்பதில் பாஜக மும்மரம் காட்டியது.

கர்நாடகாவில் பாஜக மீண்டும் அரியணைஏறினால் அது இனிமேல் நடக்கும் யுக்திகளையும்,பிரச்சாரங் களையும் மையப்படுத்தி மட்டுமே.அதுபோல ஒரு மாநிலத் தலைவராக குறுகிய காலத்தில் நியமிக்கப்பட்ட அண்ணாமலை,அதற்குள் பெரியமாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக பணி செய்வதும் அவருடைய எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமையும்..என குறிப்பிட்டு இருக்கிறார் சுந்தர் ராஜ சோழன் .

Post Tags:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும ...

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை நிர்மலா சீதாராமன் பதிலடி மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது'' என ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் சென்னை -பெங்களூர் விரைவுச்சாலை சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில்  இந்த ஆண்டு ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்தல் நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் ...

பசுமை நெடுஞ்சாலை திட்டம்

பசுமை நெடுஞ்சாலை திட்டம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் ...

2024-25 -ம் ஆண்டு பட்ஜெட் -அமித் ஷா பா ...

2024-25 -ம் ஆண்டு  பட்ஜெட் -அமித் ஷா பாராட்டு 2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட், மக்கள் நலனையும், வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டுள்ளதென மத்திய ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...