அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேதகு ஜேக் சல்லிவன் பிரதமர் மோடி அவர்களை நேற்று சந்தித்தார்

இருதரப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சி (ஐசிஇடி) திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் என்எஸ்ஏ சல்லிவன் விளக்கினார்

இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை புதிய பதவிக்காலத்தில் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்கான தமது உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) மேதகு ஜேக் சல்லிவன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று  சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில், குறிப்பாக செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், விண்வெளி போன்ற முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சியின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து என்எஸ்ஏ சல்லிவன் பிரதமரிடம் விளக்கினார்.

அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பின் வேகம், அளவு மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு குறித்துப் பிரதமர் திருப்தி தெரிவித்தார்.

அண்மையில் ஜி-7 உச்சிமாநாட்டில் அதிபர் பைடனுடன் தாம் நடத்திய நேர்மறையான கலந்துரையாடலைப்  பிரதமர் நினைவுகூர்ந்தார். உலகளாவிய நன்மைக்கு விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், புதிய பதவிக்காலத்தில் அதை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும்  உறுதிபூண்டிருப்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...