இருதரப்பு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளின் முன்னேற்றம் பற்றிய உரையாடல்

ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெசுடன் பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் இன்று (04.07.2024) தொலைபேசி உரையாடல் நடத்தினார். இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தியதுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த விஷயங்கள் பற்றியும் உரையாடியதாக பாதுகாப்பு அமைச்சர் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான ராணுவக் கூட்டாண்மையில் நாம் மகத்தான மதிப்பு வைத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

2023, நவம்பரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இருவரும்,  ராணுவக் கூட்டாண்மையில் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து உரையாடினார்கள். 2024-ல் வெளியிடப்பட்ட தங்களின் தேசியப் பாதுகாப்பு உத்திகள் குறித்த ஆவணத்தில் உயர்நிலைப் பாதுகாப்பு பங்குதாரராக இந்தியாவை ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு ராஜ்நாத் சிங்கிற்கு திரு ரிச்சர்ட் மார்லெஸ் வாழ்த்து தெரிவித்தார். டி-20 உலக சாம்பியனாக இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதற்கும், பாதுகாப்பு அமைச்சருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

72

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கி ...

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் – சிவராஜ் சௌகான் நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் என ஜனாதிபதி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பிரதமர் மோடி ஆலோசனை காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை L -முருகன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்த ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்துழைப்பை வேளாண்மை துறையில் அதிகரிக்க முடிவு இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுக ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள் தொகுப்பு 1 நூல்களை சிவராஜ் சௌகான் வெளியிட்டார் "நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள்" தொகுப்பு 1 (Wings to ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுத ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் -அண்ணாமலை ‛‛திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...