அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக இருந்த நரேந்திரமோடி தனது தோற்றத்தை மாற்றி அலைந்ததாக புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்து இன்றுடன் 50 ஆண்டுகளாகும் நிலையில், அவசரநிலை காலத்தில் எடுக்கபட்டதாகக் கூறப்படும் பிரதமர் நரேந்திரமோடியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
”அவசரநிலைக் காலத்தில் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை எதிர்த்தனர். மிகவும்சவாலான இருண்டகாலம் அது. அந்த நேரத்தில் பல தலைவர்களுடன் பணிபுரியும் அனுபவம் எனக்குக்கிடைத்தது” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
’அவசரநிலைக் காலத்தில் மற்ற அரசியல்வாதிகளைப் போலவே கைதாவதைத்தவிர்க்க மோடியும் பல்வேறு வேடங்களில் திரிந்துள்ளார். அவரை யாரும்பெரிதாக அடையாளம் காணவில்லை. அவர், காவிஉடை அணிந்து துறவியைப் போலவும், சீக்கியரைப்போல தலையில் டர்பன் அணிந்தும் மாறுவேடத்தில் அலைந்துள்ளார். ஒருமுறை சிறையில் ஒரு ஆவணத்தை வழங்க சிறைஅதிகாரிகளை ஏமாற்றி வெற்றிகரமாக உள்ளே சென்றுள்ளார்’ என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |