நாட்டு மக்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே

“நாட்டு மக்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; எங்கள் மீது மட்டுமே..” என்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) உரையாற்றினார். அப்போது அவர், “குடியரசுத் தலைவரின் உரை, நாட்டு மக்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் அளிக்கக்கூடியதாக இருந்தது. இந்தவிவாதத்தில் கடந்த இரண்டரை நாட்களில் சுமார் 70 எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எம்.பி.க்களாகிய நீங்கள் அனைவரும் இந்த விவாதத்தை செழுமைப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

6 தசாப்தங்களுக்குப்பிறகு இந்திய ஜனநாயகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து ஒரு அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைப்பது ஒருஅசாதாரண நிகழ்வு. ஆனால், சிலர் வேண்டுமென்றே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் (எதிர்க்கட்சிகள்) பெரும்சத்தத்தை உருவாக்கி நாட்டு மக்களின் இந்த முக்கிய முடிவை மறைக்கப் பார்க்கின்றனர்.

10 ஆண்டுகளாக உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் நாங்கள்செய்த பணிகளுக்கு நாட்டு மக்கள் முழு மனதுடன் ஆதரவளித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்களை ஆசீர்வதித்தார்கள். எங்களை மிகவும் நேசித்தார்கள். தேர்தலின்போது எனது நாட்டுமக்கள் வெளிப்படுத்திய அறிவாற்றல் குறித்து நான் பெருமைப் படுகிறேன். எனது நாட்டு மக்கள் செயல்திறனுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.

பாபா சாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தால் என்னைப்போன்று பலர் இங்கு வரவாய்ப்பு கிடைத்துள்ளது. பொதுமக்கள் ஒப்புதல் அளித்து, மூன்றாவது முறையாக வருவதற்கு வாய்ப்புகிடைத்தது. நவம்பர் 26-ம் தேதியை அரசியலமைப்பு தினமாக கொண்டாடுவோம் என்று எங்கள் அரசு மக்களவையில் கூறியபோது, ​​இன்று அரசியலமைப்பு சட்டத்தின் நகலை எடுத்துக்கொண்டு உலகெங்கும் அலைந்து திரிபவர்கள், ஜனவரி 26-ம் தேதியை அரசியல் சாசனமாக கொண்டாடுவதற்கு எதிர்ப்புதெரிவித்தனர். அவர்களின் அந்த செயல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். அரசியலமைப்பைப் பற்றிய புரிதலை வளர்க்க வேண்டும். அரசியலமைப்பு எங்களின் உத்வேகமாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் முயன்று வருகிறோம்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் 10 ஆண்டுகால எங்கள் ஆட்சியின் மைல்கல் முத்திரை மட்டுமல்ல, எதிர்காலத் தீர்மானங்களுக்கு மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதற்கான அத்தாட்சியாகவும் இருந்தது. நாட்டுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், எங்கள் மீது மட்டுமே!

இந்தத் தேர்தல், கடந்த 10 ஆண்டுகால சாதனைகளுக்கான ஒப்புதல் முத்திரை மட்டுமல்ல, இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் தங்கள் எதிர்காலத் தீர்மானங்களுக்கும் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நாட்டு மக்கள் எங்கள் மீது ஏக நம்பிக்கை வைத்திருப்பதால், நாட்டின் கனவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் மாறும் போது, ​​இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள அனைத்து அம்சங்களிலும் நிச்சயமாக சாதகமான தாக்கம் ஏற்படும். உலகளாவிய வரைபடத்தில் இந்திய நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்களின் இணையற்ற எழுச்சியை நாங்கள் கற்பனை செய்கிறோம். எங்கள் மூன்றாம் காலாண்டில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் வளர்ச்சி இயந்திரங்களாக பெரும் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயங்கும் நூற்றாண்டு! புதிய துறைகளில் புதிய தடங்களை விரைவில் காண்போம். அடுத்த 5 ஆண்டுகளில் பொதுபோக்குவரத்து துறையை மாற்றுவோம். விவசாயிகள் தொடர்பான அனைத்து உறுப்பினர்களையும் அவர்களின் உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் விவசாயத்தை லாபகரமாகவும், விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் மாற்றுவதில் கவனம்செலுத்தி, பலதிட்டங்கள் மூலம் அதை வலுப்படுத்த முயன்றுள்ளோம். ஒரு வகையில், விதை முதல் சந்தைவரை, விவசாயிகளுக்கான ஒவ்வொரு அமைப்பையும் மிகநுண்ணிய திட்டமிடலுடன் வலுப்படுத்த எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து, அமைப்பை வலுப்படுத்தி உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட் ...

ஜூலை 22 முதல் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் -மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ  அறிவிப்பு மக்களவையில் வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய அரசின் ...

திறப்பு விழாக்களில் கலந்து கொள ...

திறப்பு விழாக்களில் கலந்து கொள்ள சம்பளம் தரவேண்டும் அந்த பணம் மக்களின் நல்ல காரியங்களுக்கு  செலவு  செய்வேன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை ...

இருதரப்பு உறவை வலுப்படுத்துவத ...

இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்நோக்குகிறோம்  ரஷ்ய செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் 'இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை ...

தி.மு.க.,அரசை அதிகாரத்தில் இருந் ...

தி.மு.க.,அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் -மத்திய அமைச்சர் சிவராஜ் சௌகான் தி.மு.க., அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூட்டு ...

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூட்டுறவுத்துறைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்படும்-அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகரில், 102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி ...

கள்ளச்சாராயம் கேட்பதற்குகூட ந ...

கள்ளச்சாராயம் கேட்பதற்குகூட நாதியில்லை “முன் எப்போதும் இல்லாதளவுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...