நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளியல் போட்டு, புத்தாடைகளை உடுத்தி, குடும்பத்துடன் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
ஹிந்து மக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப்பதிவில், ‘இந்தத் தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பெற்று வாழ வாழ்த்துகிறேன். லட்சுமி, கணேஷா கடவுள்களின் ஆசிபெற்று, அனைத்து வளமும் பெற வேண்டுகிறேன்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பிறகு முதல் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதற்கான மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ராமர் கோவில் பக்தர்களின் எண்ணிலடங்கா தியாகம் மற்றும் வேண்டுதலினால், 500 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நிகழ்வு நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கடவுள் ராமரின் வாழ்க்கையும், அவரது லட்சியங்களும், நாட்டு மக்களுக்கு உத்வேகமாக நீடிக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |