மத்திய அரசு தொலைத்தொடர்பு புதிய சட்டம் சகாப்தத்தை உருவாக்கும்

மத்திய அரசு, தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் பிரிவு 6 முதல் 8 வரை, 48 மற்றும் 59 (பி) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை நேற்று  (04-07-2024) வெளியிட்டது. அது நேற்று (05.07.2024) அமலுக்கு வந்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் செயல்பாடு தொடர்பான சட்டத்தைத் திருத்துவதையும் ஒருங்கிணைப்பதையும் தொலைத்தொடர்பு சட்டம் 2023 நோக்கமாகக் கொண்டுள்ளது.   தொலைத் தொடர்புத் துறை மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக இந்திய தந்திச்சட்டம் மற்றும் இந்திய வயர்லெஸ் தந்தி சட்டம் போன்ற சட்டக்கட்டமைப்பை ரத்து செய்யும் வகையில் இந்த தொலைத்தொடர்புச் சட்டம் 2023 அமைந்துள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சி) மற்றும் பொறுப்புணர்வு ஆகிய கொள்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தச் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொலைத்தொடர்புச் சட்டம்- 2023, டிசம்பர் 2023-ல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் 24, 2023 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இச்சட்டம் பெற்றது.  இச்சட்டத்தின் 1, 2, 10 முதல் 30, 42 முதல் 44, 46, 47, 50 முதல் 58, 61 மற்றும் 62 ஆகியவை பிரிவுகள் ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளன.

இன்று (ஜூலை 05, 2024) முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட பிரிவுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

*அலைக்கற்றைகளை உகந்த முறையில் பயன்படுத்துதல்

*தொலைத்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும் உபகரணங்களை பயன்படுத்த தடை

*டிராய் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான வரைமுறைகள்

ஆகியவை தொடர்பான விதிமுறைகள் இந்தப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...