நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் நலனுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன- அஸ்வினி வைஷ்ணவ்

நாட்டில் கடந்த  பத்து ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) ரயில்வே குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் ஆவர். கடந்த பத்து ஆண்டுகளில் ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமைகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் ஓட்டுநர்கள் ஒரு பயணத்தை முடித்ததும், அவர்கள் தலைமையகத்திற்கு வெளியே இருந்தால் ஓய்வெடுக்க சிறப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2014-ம் ஆண்டுக்கு முன்பு, ரயில்வே ஓய்வு அறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. தற்போது இந்த அறைகள் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து 558 ஓய்வு அறைகளும் இப்போது குளிரூட்டப்பட்டுள்ளன.

பல ஓய்வு அறைகளில், பாதத்திற்கான தசைப்பயிற்சி  வழங்கப்படுகிறது. ரயில் ஓட்டுநர்களின் பணி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.

ரயில் ஓட்டுநர்கள் என்ஜின்களை இயக்குகிறார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஓட்டுநர் அறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. 2014-ம் ஆண்டுக்கு பின்பு ரயில்களில் ஓட்டுநர் அறைகள் சிறந்த இருக்கைகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 7,000-க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்அறைகள் குளிரூட்டப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட ஓட்டுநர் அறைகளுடன் தற்போது புதிய என்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன.

ரயில் ஓட்டுநர்களின் பணி நேரம் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. பயணங்களுக்குப் பிறகு ஓய்வு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சராசரி பணி நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்தது.

கடந்த சில ஆண்டுகளில், ரயில்வே ஆட்சேர்ப்பு அதிகரிக்கப்பட்டு, 34,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 18,000 ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது.

போலி தகவல்கள் மூலம் ரயில்வே குடும்பத்திற்கு  அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடையும். ஒட்டுமொத்த ரயில்வே குழுவும் நாட்டுக்கு சேவை செய்வதில் இணைந்து செயல்படுகிறது.”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...