ரயில்களில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 1000 பொதுப்பெட்டிகள் இணைப்பு

ரயில்களில் ஏசி வசதி கொண்ட ஏசி1, ஏசி2 அல்லது ஏசி3 வகுப்பு பெட்டிகளை இணைப்பதற்கு பதில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் 1000 பொதுப்பெட்டிகள் ரயில்களில்இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின் போது ரயில்வே துறை தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், ஏழைகளின் நலனுக்காகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்றைக்குரயில்களில் பொதுப்பெட்டிகளை அதிகரி்கக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 1000 பொதுப்பெட்டிகள் வெவ்வேறு ரயில்களில் இணைக்கப்பட உள்ளன.

மேலும் 10,000 பொதுப்பெட்டிகளை கூடுதலாக தயாரிக்கவும் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏசி முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு அல்லது ஏசி மூன்றாம்வகுப்பு பெட்டிகள் இணைப்பது அதிகரிக்கப்படமாட்டாது. மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் உள்ள 1300 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரி கட்டமைப்பாக திகழும் ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் புதுபபிக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தின்கீழ் பெரும்பாலான ரயில் நிலையங்கள் ரூ.700-800 கோடி வரை செலவிடப்பட்டு மறுசீரமைக்கப்படுகின்றன. சில ரயில் நிலையங்கள் ரூ.100-200 கோடி செலவில் மறுசீரமைக்கப்படுகின்றன. இநத திட்டம் முடிவடைந்ததும், இவை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் இருக்கும். ரயில்வே துறை கட்டமைப்பு முழுவதையும் குறிபபாக ரயில் நிலையங்களையும் நவீன மயமாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குபதில் அளித்த அஸ்வினி வைஷ்ணவ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்,”என்றார்.

நாடு முழுவதும் வந்தேபாரத் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி வசதி கொண்ட பெட்டிகளும் அதிகஅளவில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுப்பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இப்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...