குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.
பிரண்டையை சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு சிவக்க வதக்கி புளி, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி வைத்து துவையலாக அரைத்து மதிய சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர செரியாமை நீங்கி பசி உண்டாகும்.
பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுக்கு கால்பகுதி உப்பு, கால்பகுதி புளியும் சேர்த்து சுண்டவைத்து இளஞ்சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாய்ப்பூச வீக்கம் வாடி குணமாகும்.
பிரண்டையை நெகிழ அரைத்து உடைந்த எலும்பை சரியாக இணைத்து அதன்மேல் கவனமாக பற்றுப்போட்டு வந்தால் உடைந்த எலும்பு ஒன்று கூடிவிடும்.
பிரண்டையைத் துண்டித்து உலர்த்திக் கொளுத்திச் சாம்பலாக்கித் தண்ணீரில் கரைத்துத் தெளிவிறுத்தி காய்ச்சி எடுப்பதாகும்.
பிரண்டை உப்பு 1 குண்டுமணி அளவு எடுத்து வெண்ணெய் அல்லது நெய்யில் 1 அல்லது 2 மண்டலம் கொடுத்துவர இரப்பை, சிறுகுடல், பெருங்குடல் புண்கள், குன்மக்கட்டி, தீராத நாட்பட்ட வயிற்றுவலி, நவமூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ் இரத்தம் வருதல் தீர்ந்து குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.