2024, ஜூலை 18 அன்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையத்தின் 7-வது உயர்நிலைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது, தேசிய போதைப்பொருள் தடுப்புக்கு ‘மனஸ்’ என்ற உதவி மையத்தையும், ஸ்ரீநகரில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் மண்டல அலுவலகத்தையும் அவர் திறந்து வைப்பார். மேலும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் வருடாந்தர அறிக்கை 2023-ஐயும், போதைப்பொருள் இல்லாத இந்தியா என்பது குறித்த தகவல் தொகுப்பையும் அவர் வெளியிடுவார்.
போதைப்பொருள் தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையம் என்ற அமைப்பு மாநிலங்கள், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்புக்காக 2016-ல் அமைக்கப்பட்டது. 2019-ல் இந்த அமைப்பு 4 நிலை உள்ளதாக மேலும் வலுப்படுத்தப்பட்டது.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |