சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் செல்வாக்கை பயன்படுத்தி தப்பமுடியாது -ஜிதேந்திர சிங்

ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்போதைப்பொருள் கடத்தல் கும்பல் போன்றவர்களுக்கு எதிரான இயக்கத்தை யூனியன் பிரதேச நிர்வாகமும்  காவல்துறையும் இணைந்து தொடங்கியுள்ளன என்று மத்தியப் பணியாளர் நலன்பொதுமக்கள் குறைதீர்ப்புஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (03-08-2024) தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் ஹிராநகரில் உள்ள அரசு கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு இளைஞர்களை மேம்படுத்துதல் என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். சவால்களை சமாளிக்க உள்ளூர் நிர்வாகமும் காவல்துறையும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். கடத்தல்காரர்கள்சட்டவிரோத சுரங்க நடவடிக்கையில் ஈடுபடுவோர்பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் ஆகியோரை எதிர்கொள்வதில் அவர்களின் செல்வாக்கு அல்லது அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் எவரும் தப்ப முடியாது என்று அவர் எச்சரித்தார்.

மற்றவர்களின் குழந்தைகளை போதைப்பொருள் பழக்கத்துக்குத் தள்ளுபவர்கள்தங்கள் சொந்த குழந்தைகளும் இதே பழக்கத்துக்கு ஆளாவார்கள் என்பதை உணர வேண்டும் என்று அவர் கூறினார். ஏனெனில் அவர்கள் ஒரே சமூகத்தில் வாழ்வதால் அவர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மாணவர்கள்இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் மோசமான விளைவுகளை எடுத்துக் கூற சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்யுமாறு கல்லூரி நிர்வாகத்தை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான அறப்போரில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும்இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்குமாறும்அதிக வெளிப்படைத்தன்மைநேர்மையான நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையிலான தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் அழைப்பு விடுத்தார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத சம்பவங்களை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின்  10 ஆண்டு ஆட்சியில் கத்துவா மாவட்டம் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். பின்னர்அமைச்சர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பொது மக்களுடன் கலந்துரையாடல்குறை கேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.   மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர் ஏராளமான குறைகளை அதே இடத்திலேயே நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். மக்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் உத்தரவிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...