புத்தொழில் நிறுவனங்களுக்கு வலுவான தொழில் மேலாண்மை தொடர்பு தேவை -ஜிதேந்திர சிங்

“புத்தொழில் நிறுவனங்களின் நீடித்தத் தன்மைக்கு வலுவான தொழில் மேலாண்மைத் தொடர்பு தேவை” என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)  பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதில் இந்திய மேலாண்மை நிறுவனம் போன்றவை முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.

ஜம்முவின் புறநகரில் உள்ள ஜக்தியில் நிறுவப்பட்டுள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தின் (ஐஐஎம்) எம்பிஏ பிரிவின் புதிய மாணவர்களுக்கான அறிமுகத் திட்டத்தின் தொடக்க அமர்வில் அவர் உரையாற்றினார். வலுவான தொழில்துறை தொடர்புகள் காரணமாக பெரும்பாலான புத்தொழில் நிறுவனங்கள் வெற்றியைக் கண்டுள்ளதாக குறிப்பிட்டார். உதாரணமாக, வாசனைப் பொருள் உற்பத்தியில், வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் திறனை மேம்படுத்துவதை உறுதி செய்ததன் மூலமும், லாவெண்டர் மூலம் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள், பிற தயாரிப்புகள் போன்ற இமயமலைப் பகுதி தயாரிப்புகளின் விற்பனைக்காக சந்தை அணுகலை எளிதாக்கியதன் மூலமும் அரசு வெற்றியின் உதவியாளராக மாறியது என்று அவர் விளக்கினார்.

இமயமலை உயிரி வளங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் கண்டறியப்படாத கனிமங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கவும், இந்தியப் பொருளாதாரத்திற்கு மதிப்பைக் கூட்டவும் முடியும் என்று அவர் தெரிவித்தார். “இந்தியாவின் கடலோர மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் போன்ற இமயமலை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஆர்வமுள்ள தலைமுறையினரைப் பற்றி பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இது சிறந்த காலம் என்று தெரிவித்தார். புதிய தொழில்கள் வளர்ந்து வருவதாகவும், அதன் விளைவாக புதிய வாய்ப்புகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். “அனைத்துப் பகுதியிலிருந்தும் அனைவரும் வாய்ப்பைப் பெறும் வகையில் தொழில்நுட்பம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது” என்று அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...