சிங்கப்பூர் தொழிலதிபர்களிடம் பிரதமர் கலந்துரையாடல்

முதலீட்டு நிதி, கட்டமைப்பு, உற்பத்தி, எரிசக்தி, நிலைத்தன்மை, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிங்கப்பூரின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.09.2024) கலந்துரையாடினார். சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு கான் கிம் யோங், சிங்கப்பூர் உள்துறை, சட்ட அமைச்சர்                     கே சண்முகம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடுகளின் அதிகரிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்தியா – சிங்கப்பூர் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் சிங்கப்பூர் தொழில்துறை தலைவர்கள் ஆற்றிய பங்கைப் பாராட்டினார். இந்தியாவுடனான சிங்கப்பூரின் ஒத்துழைப்பை மேலும் எளிதாக்கும் வகையில், சிங்கப்பூரில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இந்தியா-சிங்கப்பூர் உறவுகளை விரிவான உத்திசார் ஒத்துழைப்பாக உயர்த்துவது இருதரப்பு பொருளாதார உறவுகளுக்கு பெரும் வளர்ச்சியைக் கொடுக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அரசியல் நிலைத்தன்மை, முன்கூட்டியே கணிக்கும் தன்மை, எளிதாக வர்த்தகம் செய்தல், சீர்திருத்தம் சார்ந்த பொருளாதார திட்டங்கள் ஆகிய பலங்களைக் கருத்தில் கொண்டு அதே பாதையில் இந்தியா தொடர்ந்து செல்லும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது என அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஈர்க்கக்கூடிய வளர்ச்சிக் கதை, அதன்  திறமை தொகுப்பு, விரிவான சந்தை வாய்ப்புகள் குறித்து பேசிய அவர், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா 17% பங்களிப்பு செய்து வருவதை எடுத்துரைத்தார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம், இந்திய செமிகண்டக்டர் இயக்கம், 12 புதிய தொழில்துறை பொலிவுறு நகரங்களை நிறுவுதல் போன்ற திட்டங்கள் மூலம் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான பல்வேறு முன்முயற்சிகள் குறித்து பிரதமர் பேசினார். திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் குறித்து வர்த்தகத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நெகிழ்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளை எதிர்பார்க்கும் வர்த்தகர்களுக்கு, அதன் வலிமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்தியா சிறந்த மாற்று என்று பிரதமர் குறிப்பிட்டார். தமது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் கட்டமைப்பு மேம்பாட்டின் வேகத்தையும், அளவையும் இந்தியா அதிகரிக்கும் என்று உறுதியளித்த பிரதமர், ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து, தொழில்துறை பூங்காக்கள், டிஜிட்டல் இணைப்பு ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகள் குறித்து தலைமை செயல் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும், இந்தியாவில் அவர்களது செயல்பாட்டை அதிகரிக்குமாறும் சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

வணிக வட்டமேசை மாநாட்டில் பின்வரும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்:

1. லிம் மிங் யான் – தலைவர், சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம்

2. கோக் பிங் சூன் – தலைமைச் செயல் அதிகாரி, சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு

3. கௌதம் பானர்ஜி- தலைவர், இந்தியா – தெற்காசிய வர்த்தகக் குழுமம், சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு, மூத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர், பிளாக்ஸ்டோன் சிங்கப்பூர்

 

4. லிம் பூன் ஹெங்- தலைவர், தெமாசெக் ஹோல்டிங்ஸ்

5. லிம் சௌ கியாட்- தலைமைச் செயல் அதிகாரி, ஜிஐசி பிரைவேட் லிமிடெட்

6. பியூஷ் குப்தா – தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர், டிபிஎஸ் குழுமம்

7. கோ சூன் போங் – தலைமைச் செயல் அதிகாரி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

8. வோங் கிம் யின் – குழுமத் தலைவர் & தலைமைச் செயல் அதிகாரி, செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

9. லீ சீ கூன் – குழும தலைமைச் செயல் அதிகாரி, கேபிடாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட்

10. ஓங் கிம் பாங் – குழு தலைமைச் செயல் அதிகாரி, பிஎஸ்ஏ இன்டர்நேஷனல்

11. கெர்ரி மோக் – தலைமைச் செயல் அதிகாரி, சாட்ஸ் லிமிடெட்

12. புருனோ லோபஸ் – தலைவர் & குழும தலைமைச் செயல் அதிகாரி, எஸ்டி டெலிமீடியா குளோபல் டேட்டா சென்டர்கள்

13. சீன் சியாவ்- குழும தலைமைச் செயல் அதிகாரி, சர்பானா ஜூரோங்

14. யாம் கும் வெங்- தலைமைச் செயல் அதிகாரி, சாங்கி விமான நிலையக் குழுமம்

15. யுவான் குவான் மூன்-தலைமைச் செயல் அதிகாரி, சிங்டெல்

16. லோ பூன் சாய் – தலைமை நிர்வாக அதிகாரி, SGX குழுமம்

17. மார்கஸ் லிம் – இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, எகோசாஃப்ட்

18. கியூக் க்வாங் மெங் – பிராந்திய தலைமைச் செயல் அதிகாரி, இந்தியா, மேப்பிள்ட்ரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

19. லோ சின் ஹுவா – தலைமைச் செயல் அதிகாரி, கெப்பல் லிமிடெட்

20. புவா யோங் டாட் – குழும நிர்வாக இயக்குநர், எச்டிஎல் இன்டர்நேஷனல்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...