இந்தியாவின் யூபிஐ-சிங்கப்பூரின் நிகழ்நேர பணப்பரிமாற்ற இணைப்பின் காணொலிக் காட்சி வாயிலான தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியன் லூங் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய ரிசர்வ் வங்கிஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ், சிங்கப்பூர்நிதி ஆணைய மேலாண்மை இயக்குநர் திரு. ரவி மேனன் ஆகியோர் தங்களது மொபைல் போன்கள் மூலம் எல்லைதாண்டிய பரிவர்த் தனைகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.
எல்லை தாண்டிய பகுதியில் ஒருநபரிடமிருந்து மற்றொரு நபருக்கான பணப் பரிவர்த்தனை வசதியை தொடங்கிய முதல்நாடு சிங்கப்பூர் ஆகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் / மாணவர்கள் உட்பட சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சா வழியினருக்கு இவ்வசதி உதவும். டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஃபின்டெக் பயன்களை சாதாரண மனிதர்களுக்கும் குறைந்தசெலவில் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கும் பணத்தை பரிமாற்றம் செய்வதன் மூலம் கொண்டுவரமுடியும். க்யூஆர் கோட் மூலம் யூபிஐ பணப் பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்வது சிங்கப்பூரில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப் பட்ட வர்த்தக நிறுவனங்களில் உள்ளன.
இரண்டு நாட்டு பிரதமர்களுக்கிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்மூலம் காணொலிக் காட்சி தொடங்கியது. பரஸ்பரம் நலன்சார்ந்த பகுதிகள் குறித்தும் விவாதித்தனர். இந்தியா – சிங்கப்பூர் இடையே நட்பு றவை முன்னெடுத்து செல்வதற்காக பிரதமர் லீக்-கு பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் கீழ் அவருடன் இணைந்து செயல் படுவதை எதிர் நோக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |