ஜம்மு, ”சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த தேர்தலில், ‘இண்டி’ கூட்டணியின் அங்கமாக, காங்கிரசுடன் கூட்டணி வைத்து, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி போட்டியிடுகிறது. சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக இரு நாட்கள் பயணமாக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ஜம்மு – காஷ்மீருக்கு வந்தார். ஜம்முவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.
இந்நிலையில், ஜம்முவில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
ஜம்மு – காஷ்மீரில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கது. சுதந்திரத்திற்கு பின் தேசியக்கொடி, அரசியலமைப்பின் கீழ் முதன்முறையாக தேர்தல் நடக்கவுள்ளது. முந்தைய தேர்தல்கள் இரு கொடிகள், இரு அரசியலமைப்பு சட்டங்களின் கீழ் நடந்தன. ஜம்மு- – காஷ்மீரை மீண்டும் ஊழல் மற்றும் பயங்கரவாதத்தின் நெருப்புக்குள் தள்ள, காங்., – தேசிய மாநாட்டு கட்சிகள் விரும்புகின்றன. இந்த கூட்டணியால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது. இது, 100 சதவீதம் உறுதி.
ஜம்மு- – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதாக, காங்., — தேசிய மாநாட்டு கட்சிகள் வாக்குறுதி அளித்துள்ளன. இது எப்படி சாத்தியம்? இதுகுறித்து, பரூக் அப்துல்லா, ராகுல் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசும், பிரதமர் மோடியால் மட்டுமே கொடுக்க முடியும். இந்த விவகாரத்தில் மக்களை முட்டாளாக்குவதை காங்., – தேசிய மாநாட்டு கட்சிகள் நிறுத்த வேண்டும். தேர்தலுக்குப் பின், ஜம்மு- – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என, லோக்சபாவில் நான் உறுதி அளித்திருக்கிறேன். இதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |