பொருளாதாரத்தை மீட்க மாலத்தீவுக்கு இந்தியா உதவி

ஆசிய நாடான மாலத்தீவு, இந்திய பெருங்கடல் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலம். கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், முகமது முய்சு வெற்றி பெற்றார்.

தீவிர சீன ஆதரவாளரான இவர், துவக்கத்திலேயே இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இந்தியாவை வெளியேற்றுவோம் என்று கூறியே தேர்தலை சந்தித்தார்.

அதிபரான பின், தங்கள் நாட்டில் உள்ள இந்திய படைகளை விலக்கிக் கொள்ளும்படி அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு மற்றும் மனிதநேய உதவிக்காக நிறுத்தப்பட்ட நம் வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

இதற்கிடையே, சுற்றுலா தொடர்பாக, நம் நாட்டையும், பிரதமர் மோடியையும் அந்த நாட்டின் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதனால், இரு நாட்டுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டது. சீனாவுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு வந்தார்.

தற்போது மாலத்தீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. முக்கியமாக வருவாயை ஈட்டி தந்த சுற்றுலா பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால், முகமது முய்சு நிலைப்பாட்டில் மனமாற்றம் ஏற்பட்டது.

கடந்தாண்டு இறுதியில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று, இந்தியா வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, ஐந்து நாள் அரசு முறை பயணமாக முகமது முய்சு இந்தியா வந்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகளை மீண்டும் மேம்படுத்துவது தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ரூபே கார்டுகளை மாலத்தீவில் பயன்படுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்தியா உதவியுடன் மாலத்தீவின் ஹனிமாது சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விமானப் பாதையையும் இரு தலைவர்கள் துவக்கி வைத்தனர்.

எக்சிம் வங்கியின் வாயிலாக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், ஹுல்ஹுமாலேயில் கட்டப்பட்ட, 700 வீடுகளும் ஒப்படைக்கப்பட்டன.

இந்திய பெருங்கடலில் முக்கியமான இடத்தில் மாலத்தீவு அமைந்துள்ளது. இதனால், சீனா அந்த நாட்டை தன் வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை முறியடிக்கும் வகையில், மாலத்தீவுகளுக்கு பல்வேறு திட்டங்களை, உதவிகளை பிரதமர் மோடி அறிவித்தார்.

 அந்த நாட்டில் பல துறைமுகங்கள், விமான நிலையங்கள் கட்டுவது தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கான தொலைநோக்கு திட்டம் என்ற ஆவணமும் வெளியிடப்பட்டது.

 பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மாலத்தீவுக்கு, 3,359 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

 கரன்சி ஸ்வாப் திட்டத்தின்கீழ், 3,000 கோடி ரூபாய் உதவி வழங்கப்பட உள்ளது.

ஒரு நாட்டின் கரன்சிக்கு பதிலாக மற்றொரு கரன்சி வாயிலாக, நிர்ணயிக்கப்பட்ட பரிமாற்றத் தொகையில் கடனைத் திருப்பி தருவதே, கரன்சி ஸ்வாப் ஆகும். இது, மாலத்தீவுக்கு மிகப்பெரிய நன்மையைத் தரும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...