இந்தியா மதிப்பு மிக்க நாடு முகமது முயிசு கருத்து

 ‘எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர்கள் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்தார்.

அண்டை நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக நேற்று டில்லி வந்தார். டில்லியில் அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: மாலத்தீவு இந்தியா உடனான உறவுக்கு முன்னுரிமை அளிக்கும். எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்பட்டு உள்ளது. மாலத்தீவு இந்தியா உடன் வலுவான உறவுகளை கொண்டிருக்கும். பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த கூட்டாக செயல்படுவோம்.

மற்ற நாடுகளுடன் எங்கள் உறவு இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த பிரச்னையை ஏற்படுத்தாது. இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டது உள்ளூர் மக்களின் முடிவு ஆகும். இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்பான அழைப்பிற்காக, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த பயணம் மாலத்தீவு மற்றும் இந்தியாவிற்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். இந்தியா எங்களின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிக்கும் நாடுகளில் ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிறப்பின் அடிப்படையில் திமுக த ...

பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நவீன தீண்டாமை தெலுங்கர்கள் பற்றி சர்ச்சையாகபேசிய கஸ்தூரிக்கு திமுக எம்பி ஆ ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுக ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுகளை வலுப்படுத்தும் வெற்றிகரமான பயணத்தை பியுஷ் கோயல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமா ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமானார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோ ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோடி காங்கிரசை சாடல் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முத ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம் L. முருகன் கேள்வி தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார் குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...