தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து எல்.முருகன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நரகாசுரனை அழித்துவிட்டு கொண்டாட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இதேபோன்று திமுக என்ற நரகாசுரனை 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டு,ஒரு சிறந்த தீபாவளியை நாம் கொண்டாடுவோம். நாம் அனைவரும் தயாராகுவோம்.
நம்புவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல உதயநிதி வாய் திறந்து இருக்கிறார். தீபாவளிக்கு இத்தனை நாட்களாக வாய் திறக்காதவர்கள், இன்று வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயும் தீபாவளி வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
நாட்டு மக்களின் முதல்வராக இருக்கிறீர்கள். நாட்டில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம்? வாழ்த்து சொல்வதற்கு உங்களை யார் தடுக்கிறார்கள்? முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |