பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நவீன தீண்டாமை

தெலுங்கர்கள் பற்றி சர்ச்சையாகபேசிய கஸ்தூரிக்கு திமுக எம்பி ஆ ராசா கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு இப்படி பேசினாலும்கூட தமிழ்நாட்டில் ஆரியம் வெற்றிபெறாது என்று நீண்ட அறிக்கையை வெளியிட்டு அவர் கஸ்தூரியை விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில்தான் கஸ்தூரியின் சர்ச்சைக்கு ஆரியத்தை இழுத்து பேசிய ஆ ராசாவுக்கு பாஜக செய்திதொடர்பாக ஏ.என்.எஸ் பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு, ‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலுங்கு மக்கள் பற்றி நடிகைகஸ்தூரி பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக கஸ்தூரி மீது சென்னை, மதுரை, தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கஸ்தூரியின் பேச்சுக்கு பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக எம்பி ஆ ராசாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,‛‛தெலுங்கர்கள் அந்தப்புரத்துசேவர்கள் என சர்ச்சைகருத்தை சொல்லிவிட்டு, அப்படி சொல்லவில்லை என வியாக்கியானம் பேசுகிறார். தெலுங் கர்களை மட்டுமல்ல, பெண் களையே கஸ்தூரி கேவலப்படுத்தி யிருக்கிறார்.

அந்தப்புரத்து சேவர்கள் என்று ஒருபெண்ணே பெண் இனத்தையே கேவலமாக சித்தரிப்பவர்களுக்கு மற்றஇனத்தை பற்றி என்னகவலை இருக்கப் போகிறது? இந்து கோவில்களுக்கு பெண்களை நேர்ந்து விடுவதை சட்டத்துக்கு புறம்பானதாக அறிவித்து, தேவதாசி ஒழிப்புசட்டத்தை சென்னை மகாணா சட்டமன்றத்தில் 1947 ல் நிறைவேற்றி தேவாசிகளுக்கு திருமணம்செய்யும் உரிமையை பெற்றுதந்த மண் தமிழ்நாடு. இங்கே ஆரியம் வெற்றிபெறாது என கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் கஸ்தூரியின் கருத்துக்கு ஆரியத்தை இழுத்துபேசியதற்கு தமிழக பாஜக மாநில செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டாக்டர் அம்பேத்கர் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ‘ஆரிய – திராவிட’ இனவாத கோட்பாட்டை சொல்லி எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்?. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரிக்கு பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் திமுக துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, “கி.மு. 3000-ம் ஆண்டில் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் இடம்தேடி கைபர் போலன் கணவாய்வழியே உள்ளே நுழைந்தனர்.

கொஞ்ச காலத்தில் பிராமணர்கள் மதத் தலைமையை கைப்பற்றினார்கள். அவர்களின் மனு தர்மம் வடக்கே உள்ள வாழ்வியல் முறையை வகுத்துத்தந்தது. பிறப்பால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று மக்கள் பிரிக்கப் பட்டனர்” என்று நீதிகட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் பாடிவரும் பழைய பல்லவியை மீண்டும் பாடியிருக்கிறார். இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களை மதம்மாற்றுவதற்காக, ராபர்ட் கால்டுவெல் போன்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் உருவாக்கிய கற்பனை கதைதான் ஆரிய – திராவிட இனவாதம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆரிய திராவிட இனவாத கோட்பாட்டிற்கு சரியான இடம் குப்பைதொட்டிதான் என்று கூறியிருக்கிறார். இதை வசதியாக மறைத்து விட்டு ஆராசா போன்றவர்கள் ஆரிய – திராவிட இனவாத கோட்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்லி தமிழ்நாட்டில் இனவாத அரசியலை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் அனைவரும், தங்களை ‘இந்துக்களாக உணர்ந்தால்’ ஜாதி வேறுபாடுகள் அறவே ஒழியும். அதற்கான முயற்சிகள் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனங்களில் இருந்து ஜாதி வேறுபாடுகளை களைய ஸ்ரீராமானுஜர் போன்ற மகான்கள் ஆற்றிய பணிகளை நாம் அனைவரும் அறிவோம்.

கடந்த நூறாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஜாதி வேறுபாடுகளை களைய, மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த களப்பணியாற்றி வருகிறது. அதற்கு மிகப்பெரிய வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த தேவரஸ், ‘தீண்டாமை பாவம் இல்லை என்றால், இந்த உலகில் வேறு எதுவும் பாவமில்லை’ என்று கூறியிருக்கிறார். இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்பதை இதைவிட யாரும் அழுத்தம் திருத்தமாக கூறிவிட முடியாது.

ஆனால், மொழி வெறியையும், இனவெறியையும் தூண்டி, குடும்பஅரசியல் நடத்திவரும் சில கட்சிகள், இந்துக்களை ஜாதி ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் அடைந்துவருகின்றன. இந்துக்களில் ஒரு பிரிவினரின் வாக்குகளையும், சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைக்கும் இக்காட்சிகள், இந்துக்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகின்றன. இந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகள் நீடிப்பதற்கு இதுபோன்ற கட்சிகளின் சுயநல சூழ்ச்சி அரசியலே காரணம்.

இன்று தமிழகத்தில் எந்த ஜாதி பெயரையும் சொல்லியும் யாரையும் இழிவுபடுத்திவிட முடியாது. ஆனால், பிராமணர்களை, அவர்கள் இழிவுசொல்லாக கருதும் ‘பார்ப்பான்’ என்ற பெயரை சொல்லியும், அவர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு மொழியையு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் வெளிப்படையாகவே எழுதுகின்றனர். அவர்கள் குறித்து புகார் அளித்தால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் கொடுக்க வந்தவர்களையே விரட்டியடிக்கும் நிலைதான் தமிழகத்தில் இருக்கிறது. அதனால்தான், பிராமணர்கள் தங்களுக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் உரிமை வழங்கி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்தமூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எங்கும் எதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மின்கட்டண உயர்வால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. சொத்து வரி, பால்விலை, மின் கட்டணம் என்று அனைத்தும் உயர்ந்துவிட்டன. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, மீண்டும் ‘இனவாத அரசியலை’ திமுக கையில் எடுத்திருக்கிறது இதைத்தான் ஆ.ராசா அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பிறப்பின் அடிப்படையில் இந்து மதத்தில் வேறுபாடுகள் இருப்பதாகவும், அதை பிராமணர்கள் ஏற்படுத்தியதாகவும் ஆகும் ஆராசா கூறுகிறார். ‘அனைவரும் சமம், சமத்துவம். என்பது தான் திமுகவின் கொள்கை என்றும் அவர் கூறியிருக்கிறார். இது உண்மையானால் ‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? ஆ.ராசா போன்ற திறமையும், அனுபவமும் வாய்ந்த தலைவர்கள் திமுக தலைவராக, முதல்வராக முடியுமா?.

பெரம்பலூர் பொதுதொகுதி ஆன பிறகு, ஆ ராசா, நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிடும் சூழல் ஏன் உருவானது? ஆ.ராசா போன்ற முக்கிய தலைவர்களையே பொதுத்தொகுதியில் நிறுத்த முடியாத அளவுக்கு திமுகவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறதா? பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நிரப்பப்படுவது பற்றி ஆராசாவின் கருத்து என்ன? இதுபிறப்பின் அடிப்படையிலான தீண்டாமை இல்லையா? இதை நவீன மனுதர்மம் அல்லது திராவிட மனு தர்மம் என்று கூறலாமா? பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியும், அதை துளியும் மதிக்காமல் தங்களின் மூன்றாம் தலைமுறை வாரிசான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கி இருக்கிறது திமுக தலைமை.

‘தந்தை – மகன் – பேரன்’ என்று கட்சிதலைமைக்கு பிறப்பின் அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியில் இருந்து கொண்டு மனுதர்மம்பற்றி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள். திமுகவின் இனவாத அரசியல் இனி எடுபடாது” என காட்டமாக கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க ...

இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை ...

பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய ...

பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய இந்தியா துளியும் சகித்துக்கொள்ளாது – வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் ''பயங்கரவாத நடவடிக்கைகளை, இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. ...

வடகிழக்கு மாநிலங்களை குறைத்து ...

வடகிழக்கு மாநிலங்களை குறைத்து எடை போட்டது காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி ''காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு வடகிழக்கு மாநிலங்களை அதன் ...

ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் க ...

ஏக்நாத் ஷணடே எந்த இலாக்காவும் கேட்கவில்லை – முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் 'ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை. டிசம்பர் 16ம் ...

தி.மு.க.-வின் மிரட்டலுக்கு ப.ஜ.க. அ ...

தி.மு.க.-வின் மிரட்டலுக்கு ப.ஜ.க. அஞ்சாது – அண்ணாமலை பேச்சு 'தி.மு.க., அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, வழக்கு தொடருவோம் ...

புயல் பாதிப்பை பார்வையிட வந்த ம ...

புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்தியக்குழு முதற்கட்டமாக 945 கோடி நிவாரணம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, நேற்று ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...