தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சி யமைக்கும் என்றும், அப்போது சட்டமன்றத்தில் ‘செங்கோல்’ வைக்கப் படும் என்றும் மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் திறக்கப் பட்டபோது மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப் பட்டது. அப்போ திலிருந்து செங்கோல் தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி 18வது மக்களவையின் கூட்டம் தொடங்கியது. அப்போது இந்தசெங்கோல் குறித்த சர்ச்சை மீண்டும்வெடித்தது. சமாஜ்வாடி கட்சியின் எம்பி ஆர்.கே.சவுத்ரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒவ்வொருவராக செங்கோல் குறித்து கேள்வி எழுப்பி, அதனை மக்களவையிலிருந்து அகற்றவேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது ஆளும்கட்சி தலைவர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்குபதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “செங்கோல் என்பது பெண்களை அடிமைபடுத்துவதுபோன்றது என கூறிய மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை பெண்மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வில் அதை பிடித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். மக்களவையில் பிரதமர் செங்கோல் வைத்தால் தவறு. இவர்கள்செய்தால் சரி. இதுதான் இவர்களின் அரசியல் போலி முகத்திரை” என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பான விவாதங்கள் நீண்டுக் கொண்டிருக்கையில், தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் செங்கோலை வைப்போம் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறியிருப்பது இந்த விவாதங்களை மேலும் கூர்மையடைய செய்திருக்கிறது.
அதாவது சென்னையில் இன்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவராஜ்சிங், “தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு பாஜக ஆட்சி அமையும்போது, சட்டமன்றத்தில் ‘செங்கோல்’ வைக்கப்படும். திமுக ஆட்சியின் குறைகளை மறைக்க மத்திய அரசு மீது முதலமைச்சர் ஸ்டாலின் குறைசொல்கிறார்”
திமுக அரசு தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்துவருகிறது. திமுக அரசை அகற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள் உறுதியேற்கவேண்டும். நேற்ரு அரசியல்தலைவர் ஒருவர் இங்கு படுகொலை செய்யப்பட்டார். இந்தநிலையில், மாநில அரசு தமிழகத்தை சட்டம் ஒழுங்கு சீரழியும்நிலைமையை நோக்கி இட்டுச் செல்கிறது.
மாநிலத்தின் மேம்பாடு குறித்தும், ஏழைகளின் நலன்குறித்தும் திமுக அரசுக்கு அக்கறையில்லை. தமிழகத்தில் 2026இல் பாஜக ஆட்சியமைய நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |