தமிழகத்தில் டாக்டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, வேதனை அளிக்கக் கூடியது. தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.
டாக்டர்கள் அனைத்து நோயாளிகளுக்கும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள். நோயாளியின் உறவினர்களுக்கு தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை இருக்கலாம். ஆனால் அது டாக்டர்களை தாக்கும் அளவிற்கு, நிலைமை மோசமாக இருக்கக் கூடாது.
டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உறவினருக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும். டாக்டர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது வேதனை. டாக்டர் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார். அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். டாக்டர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தமிழிசை கூறி உள்ளார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |