நிதி சார்ந்த தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில், இந்தியா – யு.ஏ.இ., உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிம்பயாசிஸ் சர்வதேச நிகர்நிலை பல்கலையின் கிளையை துபாயில் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா – யு.ஏ.இ., உறவு இன்றைக்கு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த, 2015ல் பிரதமர் மோடி யு.ஏ.இ., வந்தார். இந்த நுாற்றாண்டில் இந்திய பிரதமர் யு.ஏ.இ., வருவது இதுவே முதல்முறை. அந்த பயணத்தின் வாயிலாக, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவு வேகம் எடுத்தது.
உலகளாவிய பணியிடத்துக்கு இந்தியா இன்று தயாராக வேண்டும். அதே நேரத்தில், ‘சிப்’கள் தயாரிப்பு, மின்னணு வாகன போக்குவரத்து, சுத்தமான பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் சாதிக்க தயாராகி வருகிறது. இந்த சாத்தியக்கூறுகளின் வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், சந்தைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதன் வாயிலாக நிர்வகிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |