பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அதிபர் புடின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அக்டோபர் 23ம் தேதி ரஷ்யா செல்கிறார். அக்டோபர் 24ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
ரஷ்யாவில் உள்ள கசானில் அக்டோபர் 22, 23ம் தேதி 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்ற பிரதமர் மோடி அக்டோபர் 23ம் தேதி ரஷ்யா செல்கிறார். அப்போது பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டில் உலகளாவிய சமூகத்தை பாதிக்கும் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. முக்கியமான சர்வதேச பிரச்னைகளில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நீண்ட காலமாக நடந்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அதிபர் புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என தெரிகிறது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15வது உச்சி மாநாடு தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |