புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மூன்று புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அபினியம்’ ஆகிய இந்த மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள், ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாக நடைமுறைபடுத்தியுள்ளது, சண்டிகர் யூனியன் பிரதேசம்.

இதன் வாயிலாக மூன்று சட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தியுள்ள முதல் நிர்வாக பிரிவாக சண்டிகர் விளங்குகிறது. இது தொடர்பாக நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்து வந்த பிரிட்டிஷ் அரசுக்கு, 1857ல் நடந்த சிப்பாய் கலகம் பெரும் கலக்கத்தை அளித்தது. அதையடுத்து, இந்திய மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக கொண்டு வரப்பட்டவையே இந்த சட்டங்கள். இதன்படி, 1860ல் இந்திய தண்டனை சட்டம் வந்தது. அதைத் தொடர்ந்து மற்ற சட்டங்கள் வந்தன. இந்த சட்டங்களின் நோக்கம், இந்திய மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் செய்வது, சுரண்டுவதே.

சுதந்திர போராட்டத்துக்குப் பின், 1947ல் நமக்கு விடுதலை கிடைத்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடிவு ஏற்படும் என, மக்கள் பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனாலும், காலனியாதிக்க தாக்கம் தொடர்ந்தது.

மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் செய்யவும், சுரண்டவும் பிரிட்டிஷார் கொண்டு வந்த சட்டங்கள் தொடர்ந்தன. மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் நோக்கத்துடன், அவை மாற்றப்படவில்லை.

நம் நாடு, வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்குடன் பயணிக்கிறது. இந்த நேரத்தில், பழைய கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக இந்த மூன்று புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதை, முதலில் முழுமையாக செயல்படுத்தியுள்ள சண்டிகர், மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.

இந்த புதிய சட்டங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன், நீதி விரைவாக கிடைப்பதை உறுதி செய்யும்.புதிய சட்டங்கள் அமல்படுத்தியதன் வாயிலாக, காலனி ஆதிக்க மனநிலை மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...