பல்லாவரம் உட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி , மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கபட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் தான் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மலைமேடு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் தா.மோ அன்பரசன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்தார்.
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் தான் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மலைமேடு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் தா.மோ அன்பரசன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்தார்.
குடிநீரில் கழிவுநீர் கலந்தது எனக் கூறப்படும் நிலையில், தண்ணீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்லாவரத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பது,
“சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன்.
இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?
அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 – 13 தான் என்கிறார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.” என பதிவிட்டுள்ளார்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |