”அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ், அதன் ஆன்மாவையும், முகப்புரையையும் மாற்றியது,” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.
லோக்சபாவில் அரசியலமைப்பு சட்ட விவாதத்தில் அவர் பேசியதாவது: அரசியலமைப்பு மீது நீங்கள் தான் தாக்குதல் நடத்தினீர்கள். அதன் முகப்புரையையும், ஆன்மாவையும் மாற்றினீர்கள்.
பாகிஸ்தானின் நிலை என்ன எனபதும், வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆப்கனில் சீக்கியர்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திபெத், மியான்மர், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் மீது அடக்குமுறை எழும்போது, அவர்கள் அடைக்கலம் தேடி வரும் முதல் நாடு இந்தியா
அப்படி இருக்கையில் நீங்கள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என எப்படி சொல்கிறீர்கள். சிறுபான்மை இன மக்களுக்கு இந்தியா சம ஓட்டு உரிமை வழங்கிய நிலையில், சிலர் அவர்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை என சொல்கின்றனர். நமது வார்த்தைகளும், செயல்களும், உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அமைந்து விடக்கூடாது.
சிறுபான்மையினருக்கு இந்தியா உரிமை வழங்கியதோடு மட்டும் அல்லாமல், அவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கையையும் எடுத்து உள்ளது. அவர்களை பாதுகாக்க முந்தைய அரசுகளும் நடவடிக்கை எடுத்து உள்ளன. இதில் காங்கிரசின் பங்கை குறைத்து மதிப்பிடவில்லை.
அம்பேத்கரைப் பற்றி காங்கிரசார் அதிகம் பேசுகின்றனர். ஆனால், அவருக்கு உங்களது ஆட்சி காலத்தில் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. 1956க்கு பிறகு முன்னாள் பிரதமர் நேருவுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. இந்திரா தனக்கு தானே பாரத ரத்னா விருதை கொடுத்தார். காங்கிரசை தோற்கடித்து பா.ஜ., ஆதரவுடன் ஆட்சி அமைத்த வி.பி.சிங், பிரதமர் ஆக பதவியேற்ற பிறகு தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த விருதை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வழங்காதது ஏன் என அக்கட்சியினர் விளக்க வேண்டும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |