மகா கும்பமேளா நிகழ்வு சமூகத்தை வலுவூட்டுவது மட்டுமின்றி மக்களுக்கு பொருளாதர பலத்தையும் அளிக்கிறது. இது நாட்டின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்த பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த முறை நடந்த கும்பமேளாவின் போது இங்கு புனித நீராடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இன்றைக்கு மறுபடியும் கங்கை தாயின் காலடியில் ஆசி பெறும் பாக்கியம் கிடைத்துள்ளது.
தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், அதை தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை அளிக்கவும் மகா கும்பமேளாவை நம் துறவிகள் நுாற்றாண்டு காலமாக பயன்படுத்தி வந்தனர். அன்றைய காலகட்டத்தில் கூட, சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக கும்பமேளா இருந்துள்ளது.
கடந்த கால ஆட்சிகளில் கும்பமேளாவுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. பக்தர்கள் பல சங்கடங்களுக்கு ஆளாகினர். அதை அப்போதைய அரசும் கண்டுகொள்ளவில்லை. நம் கலாசாரத்துடன் அவர்கள் விலகி இருந்தே அதற்கு காரணம்.
ஆனால் இன்றைக்கு இந்திய கலாசாரத்தின் மீது மதிப்பும், நம்பிக்கையும் வைத்துள்ள அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் உள்ளன. எனவே தான் இந்த கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
இது போன்ற பிரமாண்ட நிகழ்வுகளில் துப்புரவு பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்த நிகழ்வில் 15,000 துப்புரவு பணியாளர்கள் இந்த நகரின் துாய்மைப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
துப்புரவு பணியாளர்களின் பாதங்களை, 2019ல் சுத்தம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது. இந்த கும்பமேளா நிகழ்வு, சமூகத்தை வலுவூட்டுவது மட்டுமின்றி, மக்களுக்கு பொருளாதார பலத்தையும் அளிக்கிறது. இது நாட்டின் கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |