நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ஆத்மாவை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த மகாகும்பமேளா குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று நாடாளுமன்ற லோக்சபாவில் பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு மக்களவையில் பிரதமர் நரேந்திரமோடி இன்று உரையாற்றினார். மகாகும்பமேளாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்த நாட்டின் எண்ணற்ற மக்களுக்கு, தனதுமனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கூறினார். மகா கும்பமேளா நிகழ்வை வெற்றிபெறச் செய்ததில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்களின் கூட்டுப் பங்களிப்பை எடுத்துரைத்தவர், அரசு மற்றும் சமூகம் இரண்டில் இருந்தும் ஈடுபட்ட அனைத்து தர்ப்பினரின் அர்ப்பணிப்புமிக்க பணிகளை அங்கீகரித்து பாராட்டு தெரிவித்தார். நாடுமுழுவதிலும் உள்ள பக்தர்கள், குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில மக்கள் அளித்த ஆதரவுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மகா கும்பமேளாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு தேவைப்படும் அளப்பரிய முயற்சிகளை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, கங்கையை பூமிக்குக் கொண்டுவரும் பகீரதனின் அசாதாரணமான முயற்சியுடன் அதனை ஒப்பிட்டுப்பேசினார். செங்கோட்டையிலிருந்து ஆற்றிய உரையின் போது அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் . மகா கும்பமேளா நிகழ்வு நாட்டின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. மக்களின் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்துள்ளது . மக்களின் வலுவான நம்பிக்கையின் காரணமாக இந்த நிகழ்வு வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மகா கும்பமேளாவின் போது காணப்பட்ட தேசிய உணர்வு குறித்த பிரக்ஞையைச் சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தப் பிரக்ஞை புதிய தீர்மானங்களை நோக்கி நாட்டை செலுத்துவதோடு அவற்றை நிறைவேற்றுவதற்கு உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது என எடுத்துரைத்தார். நாட்டின் திறன்கள் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்கள், அச்சங்களுக்கு மகா கும்பமேளா நிகழ்வு சிறந்த தீர்வை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நீண்ட பயணத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, கடந்த ஆண்டு அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பிராணபிரதிஷ்டா விழாவுக்கும், இந்த ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டினார். இந்த நிகழ்வுகள் அடுத்த நூற்றாண்டை எதிர்கொள்வதற்கு நாடுதயாராக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் ஒற்றுமை உணர்வு அதன் அளப்பரிய ஆற்றலை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார். மனித வரலாற்றைப் போலவே, நாட்டின் சரித்திரத்திலும் முக்கிய தருணங்கள் நிகழும் என்பதை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல இது சிறந்த உதாரணமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

சுதேசி இயக்கத்தின்போது ஏற்பட்ட ஆன்மீக மறுமலர்ச்சி, சிகாகோ-வில் சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற உரை, 1857-ம் ஆண்டின் எழுச்சி, பகத் சிங்கின் தியாகம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தில்லி சலோ அறைகூவல், மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை போன்ற இந்திய சுதந்திரப்போராட்டத்தின் முக்கிய தருணங்களை மேற்கோள் காட்டிய பிரதமர், நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மகத்தான சாதனைகள் படைக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். பிரயாக்ராஜ் மகா கும்பமேளா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு உணர்வை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

45 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது மக்களிள் உற்சாகத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், அடிப்படை வசதிகள் குறித்த கவலைகளுக்கு அப்பாற்பட்டு கோடிக்கணக்கான பக்தர்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் அதில் பங்கேற்றதாகக் கூறினார். மகா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து புனித நீரை எடுத்துச்சென்ற பிரதமர், மொரீஷியஸின் கங்கை தலவோவில் அதை கலந்தபோது நிலவிய பக்தி, கொண்டாட்ட சூழலை விவரித்தார். இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம், மாண்புகளை அரவணைத்து, கொண்டாடி, பாதுகாக்கும் உணர்வை இதுபிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

பல்வேறு தலைமுறைகளைக் கடந்து நாட்டின் பாரம்பரியம் தடையின்றி தொடர்வது குறித்து குறிப்பிட்ட பிரதமர்மோடி, இந்தியாவின் இளைஞர்கள் மகா கும்பமேளா உள்ளிட்ட பிறபண்டிகைகளில் ஆழ்ந்த பக்தியுடன் தீவிரமாகப் பங்கேற்றதையும் எடுத்துரைத்தார். இன்றைய இளைஞர்கள் தங்களது பாரம்பரியம், நம்பிக்கைகளைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்வதாகவும், இது இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் வலுவான தொடர்பைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒருசமூகம் தனது பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்ளும்போது, அது மகா கும்பமேளா நிகழ்வு போன்ற பிரம்மாண்டமான மற்றும் எழுச்சியூட்டும் தருணங்களை உருவாக்குகிறது , அத்தகைய பெருமையானது ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் உதவுகிறது . இது போன்ற நிகழ்வுகள் நாட்டின் இலக்குகளை அடைவதற்கான தன்னம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாக உள்ளது. பாரம்பரியம், நம்பிக்கை ஆகியவற்றுடனான தொடர்பு சமகால இந்தியாவுக்கு ஒருமதிப்புவாய்ந்த சொத்தாகத் திகழ்கிறது , இது நாட்டின் வலிமையான ஒருமைப்பாட்டையும் கலாச்சார வளத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மகா கும்பமேளா பல்வேறு விலைமதிப்பற்ற பலன்களை அளித்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், ஒற்றுமை உணர்வு அதன் புனிதத்தன்மையுடன் கூடிய காணிக்கையாகும் . கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மக்கள் தங்களது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒற்றுமை உணர்வுடன் வந்திருந்தனர் . பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள் புனிதமான திரிவேணியின் ஒருஅங்கமாக மாறியுள்ளது , தேசியவாதம், நாட்டுப் பற்றை வலுப்படுத்துவதாக அமைந்தது. பல்வேறு மொழிகள், பேச்சு வழக்குகளைக் கொண்டுள்ள மக்கள் ஹரஹர கங்கே என்று கோஷமிட்டபோது, அது ஒரேபாரதம், உன்னத பாரதம் என்ற ஒற்றுமை உணர்வை மேம்படுத்துகிறது . வயது வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்றனர் இது நாட்டின் வலிமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. மக்களின் ஒற்றுமைஉணர்வு நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் அடையாளமாகத் திகழ்கிறது . இது பிரயாக்ராஜில் நடைபெற்ற மகாகும்பமேளாவில் காணமுடிந்தது.

மகா கும்பமேளாவில் இருந்துபெற்ற அனுபவங்கள் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளன, நாட்டில் பரந்தவிரிந்துள்ள நதிகள் குறித்து எடுத்துரைத்தார். ஆற்றுத் திருவிழாக்களின் பாரம்பரியத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர், இதுபோன்ற முயற்சிகள் இன்றைய தலைமுறையினர் நீரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவும், நதிகளின் தூய்மையை மேம்படுத்தவும், அதன் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உதவும் என்று கூறினார்.

மகா கும்பமேளா நிகழ்வு நாட்டின் வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான வலுவான ஊடகமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து, பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார். மகா கும்பமேளாவை ஏற்பாடுசெய்த ஒவ்வொருவருக்கும் பாராட்டுத் தெரிவித்த அவர், நாடு முழுவதும் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவையின் சார்பில் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...