அடிமை மனநிலை உடைய சில தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நம் நாட்டின் மத மற்றும் கலாசார மரபுகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் காரணமாக நடந்த உயிரிழப்புகள், 300 கி.மீ., துாரம் வரையிலான போக்குவரத்து நெரிசல்களை பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘இது மஹா கும்பமேளா அல்ல; மரண கும்பமேளா’ என, தெரிவித்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பதிலடி தந்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்புரில், ஸ்ரீ பாகேஷ்வர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
ஹிந்து நம்பிக்கைகளை வெறுப்பவர்கள் பல நுாற்றாண்டுகளாக பல்வேறு வேடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் அடிமை மனநிலை உடையவர்கள். வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் நம் நம்பிக்கைகள், கோவில்கள், துறவியர், கலாசாரம் மற்றும் மரபுகளை தாக்குகின்றனர்.
ஹிந்து பண்டிகைகள், நம்பிக்கைகளை இழிவுபடுத்துகின்றனர்.
நம் நாட்டின் சமூக ஒற்றுமையை உடைப்பதே இந்த கும்பலின் நோக்கம். நம் மதம் மற்றும் கலாசாரம் மீது சேற்றை வாரி வீசுகின்றனர்.
இது போன்றவர்களை ஆதரித்து, நம் நாட்டையும், ஹிந்து மதத்தையும் பலவீனப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு சக்திகள் ஈடுபடுவது பல காலமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |