பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் 100 கி.மீ., வரை வந்து தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் கனவில் கூட நினைத்து பார்த்தருக்காது என்று பா.ஜ.,எம்.பி., சம்பித் பாத்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது மிகச் சிறந்த சாதனையாகும். இதுதான் புதிய இந்தியா. அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டை, அதன் சொந்த மண்ணுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

இருதரப்புகளிடையே போர் நிறுத்தத்திற்கு எந்த ஒப்பந்தமும் போடவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையின் பேரிலேயே தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.

பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பயத்தை மட்டும் கொடுக்கவில்லை, அந்நாட்டு பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்து விட்டார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம், பாகிஸ்தான் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இதுவரையில் யாரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொட்டு கூட பார்த்ததில்லை.

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவால் அடையக்கூடிய தூரத்தில் உள்ளது. எங்கள் இலக்குகள் துல்லியமாக இருந்தன. பயங்கரவாதிகள் இருந்த இடங்களை மட்டுமே தாக்கப்பட்டுள்ளது.

இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் 100 கி.மீ., வரை வந்து தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் கனவில் கூட நினைத்து பார்த்திருக்காது, இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...