செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.
செம்பரத்தம் பூவை உலர்த்திப் பொடித்துச் சம எடை மருதம் பட்டைத்தூளுடன் கலந்து பாலில் காலை, மாலை பருகிவர இருதய பலவீனம் குணமாகும்.
செம்பரத்தை வேர்ப்பட்டை, இலந்தை மரப்பட்டை, மாதுளம் பட்டை சமஅளவு எடுத்து சூரணம் செய்து 4 சிட்டிகை வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர பெரும்பாடு குணமாகும்.
செம்பரத்தம் பூ 500 கிராம் எடுத்து நெகிழ அரைத்து அதில் 1 கிலோ சர்க்கரையை போதிய நீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக் கலந்து சிறுதீயில் எரித்து குழம்புப் பதமாக்கி வைத்துக்கொண்டு 15 மி.லியாகக் காலை, மாலை சாப்பிடுவர உட்சூடு, நீரெரிச்சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல் வீக்கம் நீர்க்கட்டு ஆகியவை தீர்ந்து குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.