ஓரிசா மானிலத்தில் பல சக்தி வழிபாட்டு ஆலயங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தாரா தாரிணி என்ற ஆலயம் . தெற்குப்புற ஒரியாப் பகுதிகளில் தாரா – தாரிணி பலருக்கும் குலதெய்வமாக உள்ளது.
ஓரிசாவில் பெர்ஹம்புர் என்ற இட தில் இருந்து நாற்பது கல் தொலைவில் உள்ள புருஷோத்தம்பூரில் கன்ஞம் என்ற மாவட் டத்தின் அருகில் ஓடும் ருக்ஷிகுல்யா என்ற நதியின் பக்கத்தில் சுமார் 700 அடி
உயரத்து மலை மீது உள்ளது இந்த ஆலயம் . அந்த ஆலயத்திற்கு நடந்து செல்ல வேண்டும் எனி ல் 999 படிகள் ஏற வேண்டும் . கடைசி படியான ஆயிரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. ஆனால் வாகனத்தின் மூலமும் செல்ல முடியும் . ஒவ் ஒரு படியையும் கடக்கும் பொழுது தேவியின் ஸ்லோகமாக தாராதாரிணி நமஹ: எனக் கூறிக் கொண்டு நடப்பதினால் பலன் அதிகம் கிடைக்கும் என்பது ஐதீகம் .
அந்த ஆலயத்தில் இரண்டு தேவிகள் உள்ளனர் . பெரியவளுடைய பெயர் தாரா, சிறியவள் தாரிணி. கல்லில் முகம் போன்று செதுக்கப்பட் டு உள்ள அந்த சிலைகளுக்கு அழகுற அணிகலன்கள் அணிவித்து பெண்ரூபமாக முதலில் அங்கு குடியேறி இருந்த ஆதிவாசிகள் வணங்கி வந்தனர். நாளடைவில் அனைவரும் சென்று பூஜிக்கும் சக்தி பீடமாக மாறிவிட் டது அந்த ஆலயம். அந்த பாறையில் உள்ள சிலைகளைப் போலவே பித்தளையில் இரு தேவிகள் செய்யப்பட்டு பூஜிப்பதெற் கெனவைக்கப்பட்டு உள்ளன. மூலகற் சிலை பழுதடைந்து விடக் கூடாது என்பதினால் ஆலய நுழை வாயிலில் உள்ள அந்த மாற்று சிலைகளுக்கு மட்டுமே பூஜைகள் செய்ய அனுமதி உள்ளது.
எவரையும் கற்பக்கிரகததினுள் அனுமதிப்பதில்லை. ஒரு காலத்தில் அந்த ஆலயம் உள்ள இடத்தின் பக்கத்தில் ஓடும் ருஷிகுல்யா என்ற நதியில் பயணம் செய் து வாணிபம் செய்தவர்கள் , மீன் பிடிப்பவர்கள் என நதியை நம்பி வாழ்ந்து கொண்டு
இருந்தவர்கள் அந்த தேவிகளை வழிபட்ட பின் பயணத்தைத் துவக்கினராம் .
மார்ச் – ஏப்ர ல் மாதங்களில் நடக்கும் விழாக்காலத்தில் ஐந்து முதல் ஆறு லட் ச மக்கள் வரை அந்த ஆலயத்தில் தரிசனம்செய்ய வருகின்றனா ; . இருபதாம் நூற்றாண்டுகளுக்கு முன் சில சமயங்களில் அந்த ஆலயத்தில் பலிகள் தரப்பட்டு வந்தது. அதை தற்பொழுது தடை செய்து விட்டனராம் . ஓவ் ஒரு மாதமும் சங்கராந்தி தினத் தன்று விஷேசபூஜைகள் நடைபெறுகின்றன. ஏன் எனில் தந்திர சாதகம் செய்ய அது நல்ல நாளாக கருதப் படுகின்றது . அந்த ஆலயத்தில் சென்று தலைமுடியை காணிக்கையாக செலுத்துபவர்களும் (மொட் டையடித்துக் கொள்ளுதல்), குழந்தைகளுடைய முதல் தலை முடியை காணிக்கையாகத் தரும் வழக்கமும் உள்ளன.
ஆலய வளாகத்திற்குள் திருமணங்களும் , பூணூல் வைபவங்களும் நடைபெற அனுமதி உள்ளது. அந்த இரண் டு தேவிகளான பீடம் அங்கு வந்ததின் காரணம் வரலாற்று உண்மைகள் மூலம் தெரியவில்லை என்றாலும் அந்த ஆலயத்தைச் சுற்றி மூன் று கதைகள் உள்ளன.
தட்சயாகத்தில் தன் கணவனை அவமதித்த தந்தையை எதிர்த்து பார்வதி தீக்குளிக்க அவள் உடலை தூக்கிக் கொண்டு சிவபெருமான் நிருத்திய தாண்டவம் ஆட உலகில் பிரளயம் ஏற்பட்டது. சிவன் கையில் இருந்த பார்வதியின் உடல் அவர் கையில் உள்ளவரை அவர் அந்த கொடூரமான நாட்டியத்தை நிறுத்த மாட்டார் என உணர் ந் த பிரும் மா, விஷ் ணு, மற்றும் சனி பகவான்கள் அவள் உடலில் புகுந்து கொண் டு அவள் உடலை 108 பாகங்களாக வெட்டி எறியத்துவங்க பார்வதியின் இரு மார்பகங்களும் அந்த இடத்தில் விழுந்தன. அதனால் இரண்டு தேவியான தாரா- தாரிணி இருவரும் அங்கு எழுந்தனராம் .
இன்னொரு புராணத்தின்படி பார்வதியின் உடலை மகா விஷ்ணுவே சுதர்சன சக்கரத்தை வீ சி துண் டுகளாக்கினார் என்ற செய்தியும் உள்ளது. இரண்டாம் கதை இது. அங்கிருந்த ஒரு கிராமத்தில் இரு இளம் பெண்கள் அதிசயம் நிகழ்த்தி வந்தனர் . கிராமமக்களின் பல துயரங்களை, நோய் நொடிகளைத் தீர்த்து வைத்தனர் . அவர்களுடைய தாய் -தந்தை எவர் என எவருக்கும் தெரியவில்லை என்பதினால் சிறு வயது முதலே ஒரு பிராமணர்
அவர்களைப் போற்றி வளர்த்து வந்தார் . வளர்ந்து வந்த அவர்கள் ஒரு கால கட்டத்தில் தம் இருவருக்கும் அந்த இடத்தில் ஆலயம் அமைக்கு மாறு அவரிடம் கூறிவிட்டு மறைந்து போனார்கள் . அதனால் அந்த பிராமணர் மூலம் அந்த ஆலயம் எழுந்தது.
மூன்றாவது கதையின்படி அந்த தேவிகள் இருவரும் புத்தர்கள் வணங்கி வந்த சக்தி தேவதைகள் . ஒரு கால கட் டத்தில் , அதாவது முதலாம் நூற்றாண்டில் மகாமாய புத்தப் பிரிவினர் தந்திரக் கலைகளைக் கற்றறியத் துவங்கிய கால கட் டத்தில் அந்த தேவிகளை ஆராதித்து தந்திரக் கலைகளை வளர்த்துக் கொண்டனர் . அதனால் தான் அந்த ஆலயத்தில் ஒரு சிறிய புத்தர் சிலை தியானம் செய்யும் கோலத்தில் உள்ளது என அந்த கதைக்கான காரணம் கூறபபடுகின்றது
நன்றி சாந்திப்பிரியா
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.