பெங்களுர்- மைசூர் போகும் பாதையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினா என்ற கிராமத்தின் அருகில் உள்ள சங்கம் ; என்ற இடத்தில் உள்ளது நிமிஷாதேவி ஆலயம் . அதற்கு அந்த பெயர் வந்ததின் காரணம் ஒருவர் உண்மையில் மனம் வருந்தி அவளிடம் வேண்டிக் கொண்டால் ஒரு நிமிடத்தில்; அவள் வரத்தை கொடுத்து அருள் புரிவாளாம் .
அந்த ஆலயம்; 15 48 ஆம் ஆண்டை சார்ந்தது என்று சிலரும்; சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு உள்ளது என்றும சிலரும் கூறம் அந்த புரான ஆலயம் புதுப்பிக்கப் பட்டு இருந்தாலும் ஆலயத்தின் உட்புறம் அந்த காலத்தில் நிறுவப்பட்ட நிலையில் மாற்றம் இன்றி சிலைகள் அப்படியே உள்ளன. அந்த உட்புறத்தை நோக்கும் பொழுதே அது எத்தனை பழைமையான ஆலயம் என்பது புலப்படும் . தேவியை வேண்டிக் கொண்டு புடவை சாத்துவதும், வளையல் போடுவதும் பழக்கத்தில் உள்ளன. விழாக் காலங்களிலும் வெள்ளிகிழமைகளிலும் – முக்கியமாக நவராத்ரி காலத்தில் கூட்டம் தாங்க முடியாமல் உள்ளது.
இரண்டு அசுரர்களின் தொல்லையைத் தாங்க முடியாமல் போன ஒரு முனிவரான முக்தானந்தாவின் வேண்டுகோளை ஏற்று அவள் அங்கு அருள் பாலித்தாள் என்பது ஐதீகக் கதை. முன் ஒரு காலத்தில் மக்களின் நல் வாழ்விற்காகவும் , நாட்டின் சுபீட்சத்திற்காகவும் ஒரு யாகம் செய்யுமாறு முனிவர் முக்தானந்தா என்பவரிடம் ஆட்சியில் இருந்த மன்னன் வேண்டினான் . காவேரி நதிக் கரையில் தற்பொழுது ஆலயம் உள்ள அந்த இடம்தான் யாகத்திற்கு சிறந்தது என்று நினைத்த முனிவர் அங்கு யாகசாலை அமைத்து தபத்தில் அமர்ந்து கொண்டு தேவியின் அருளை வேண்டினார் .
ஆனால் அந்த யாகம் துவங்கிய உடனேயே அது வெற்றிகரமாக நடந்து விட்டால் தமக்கு அங்கு இருக்க இடம் இருக்காது என எண்ணிய ஜானு மற்றும் சுமன்தலா என்று பெயர் கொண்ட இரண்டு அசுரர்கள் அவருடைய தவத்திற்கு இடையூறு செய்யத் துவங்கினா ; . அவர் யாக குண்டத்தைக் கலைத்தும் பல்வேறு விதங்களில் யாகப் பொருட்களை நாசமாக்கிய வண்ணமும் இருக்க அனைத்து மன சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்ட முனிவர் , அந்த அசுர ர்களின் கொட்டத்தை முதலில் அடக்குமாறு தேவியிடம் பிரார்தனை செய்தார் .
அவருடைய பிரார்தனைக்கு பலன் கிடைத்தது. உக்கிரகமாக அந்த யாக குண்டத்தில் இருந்து வெளியே வந்த தேவி ; , அந்த இரண்டு அசுரர்களையும் வதம் செய்ய முனிவருடைய யாகம் நாட்டின் ஷேமத்திற்காக தொடர்ந்தத
அவருடைய பிரார்தனையை ஏற்றுக் கொண்டு அவருக்கு அருள் பாலித்த தேவி தனக்கு அந்த இடத்திலேயே ஒரு ஆலயம் அமைத்து வழிபடுமாறு அவரிடம் கூறினாள் . நிமிடத்தில் தான் வேண்டியதை நிறைவேற்றிய தேவிக்கு அவா அந்த இடத்தில் ஒரு ஆலயம் அமைத்து அவளை நிமிஷாதேவி என ஆராதித்தார்.
ஒவ்ஒருவருடைய உண்மையான வேண்டுகோளையும் ஏற்று அவர்கள் வேண்டியதை தந்தவண்ணம் காவிரிக் கரையில் கஞ்சம் என்ற ஊரில் அமர்ந்து கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றாள் நிமிஷாதேவி அன்னை. ஊருக்குள் செல்லும் பாதை அத்தனை நன்றாக இல்லை என்றாலும் ஒதுக்குப்புறமாக உள்ள அந்த ஆலயத்தில மூன்று சிறிய அளவிலான சன்னதிகளே உள்ளன. மூன்றாவது சன்னதியில் அன்னை வீற்று இருக்கிறாள் . ஆந்த தேவியை சிவனுடைய அவதாரம் என்று கூறுகின்றனர் .
அந்த தேவியின்; முன்னால் ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டு உள்ளது. அன்னையை பூஜிக்க வேண்டுமானால் ஸ்ரீசக்கரத்திற்குதான் பூஜை செய்ய வேண்டுமாம் . மற்றதில் கணபதியும் சிவபெருமானும் உள்ளனர் .
இப்படி புகழ் பெற்ற அந்த ஆலயத்திற்கு பலருக்கும் செல்ல முடியாமல் இருக்கின்றது என்பதினாலோ என்னவோ , 1959 ஆம் ஆண்டு பிறந்த ஹர்ஷ சாஸ்திரி என்பவர் மூலம் பெங்களுரில் இராஜராஜேஸ்வரி நகரில் அந்த அன்னைக்கு இன்னமும் ஒரு ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. பெங்களுரில் அந்த ஆலயம் வந்த கதைதான் என்ன ?
தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பும் , மைசூரில் பட்டப்படிப்பும் பயின்றவர் ஹர்ஷ சாஸ்திரி அவாகள் ; . தெய்வ பக்தி மிகுந்தவர் . அவருடைய பல உறவினர்கள் அவருடைய தெய்வ பக்தியை எள்ளி நகையாடிய பொழுதும் அவர் கலங்கவில்லை. ஒருவனுக்கு இறை வழிபாடும் , தெய்வ நம்பிக்கையுமே அவனுடைய செயல்களுக்கு ஊக்கம் தருகின்றது எனக் கருதியவர் .
1995 ஆம் ஆண்டு அவருடைய தொழிலில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. பணமுடை ஏற்பட்டு தொழில் அழிந்து விடுமோ என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. பெற்றோர் தீர்க்க முடியாத நோயினால் பீடிக்கப்பட்டனர் . அதை அனைத்தையும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தவரிடம் அவருடைய ஒரு நண்பர் நிமிஷாதேவி ஆலயத்திற்கு சென்று வழிபடுமாறு யோசனைக் கூறினார் . அதை ஏற்று மைசூரில் இருந்து ஸ்ரீரங்கப் பட்டிணத்திற்கு காரில் சென்றவர் அந்த ஆலயத்தில் நுழைந்ததுமே எதோ அந்த இடம் தனக்கு மிகவும் பரிச்சயமான இடமாக இருந்தது போலவும் , அந்த ஆலயத்தில் இருந்த ஒவ்ஒரு கல்லையும்; தான் ஏற்கனவே பார்த்தது போலவே இருக்கக் கண்டு, ஆலயத்தில் நுழைந்து அன்னை பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார் . ஆலயத்தில் இருந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு திரும்பினார் . அங்கிருந்து பெங்களுர் செல்ல முடிவு செய்து காரில் பயணத்தைத் துவக்கியவருடைய காரில் இருந்த சக்கரங்கள் தாமாகவே கழன்று விழுந்து பாதையை உராசிக் கொண்டு கார் நின்று போயிற்று. ஆனால் அவருக்கு அடிபடவில்லை. மற்றவர்கள் உதவியுடன் அதை சரி செய்து கொண்ட பின் வியாபார விஷயமாக பெங்களுர் சென்று விட்டு திரும்பிய பொழுது எதோ தோன்றவே மீண்டும் நிமிஷாதேவி ஆலயத்திற்கு சென்றார் .
அங்கு தரிசனம் முடிந்த பின் மைசூர் திரும்பும் வழியில் இன்னும் ஒரு விபத்து ஏற்பட்டு அதே காரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டார் . வண்டி முற்றிலுமாக நாசம் அடைந்தும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆகவே இனி அந்த ஆலயத்திற்கு செல்லக் கூடாது என முடிவு செய்தார் . ஆனாலும் விதி விடவில்லை.
அடுத்த பதினெட்டாம் நாள் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்று அவருடைய மனதில் தவிர்க்க முடியாத எண்ணம் ஏற்பட ஆலயத்திற்குள் சென்று கண்களை மூடிக் கொண்டு அன்னையே என்னை இருமுறை காப்பாற்றி விட்டாய். இந்த முறை விபத்து நேரிட்டால் என் உயிரை எடுத்துக் கொண்டு விடு என்று பிரார்தனை செய்தார் . ஒரு பெரிய ஒளி வெள்ளம் அவர் கண்கள் முன்பு தோன்றி அவரை எழுப்பியது. கண்களைத் திறந்து பார்த்தவருக்கு நம்ப முடியவில்லை. ஒரு துறவி நின்று கொண்டு அவர் நெற்றியில் குங்குமம் இட்ட பின் இனி உன்னுடைய காலத்தை அன்னையின் சேவையில் தொடர்ந்து கொண்டு இரு என்று கூறிய பின் மறைந்து விட்டார் .
அதனால் கலக்கமுற்றவர் , அன்னையின் சன்னதியில் நுழைந்து அன்னையை நோக்க அங்கு அன்னையின் சிலை தென்படவில்லை. மாறாக அந்த தேவியே நின்று கொண்டு; அவரை உட்காரும்படி ஆணையிட்டாள் .அவளுடைய மூன்றாம் கண்களில் இருந்து வெளிவந்த ஒளி அவருடைய நெற்றியில் பாய ஆறு மணி நேரம் சமாதி நிலையில் அங்கே அமர்ந்தபடி இருந்தார் . கண் முழித்து எழுந்தவரிடம் , இனி திரும்ப பெங்களுர் சென்று என் பணிகளைத் துவக்கு என ஆணையிட்டாள் . அன்று முதல் அவர் அன்னையின் சக்தி பெற்ற ஆன்மீக குருவாக மாறி விட்டார் . அதனால் அந்த மகான் இராஜராஜேஸ்வரி நகரில் அன்னைக்கு அகம விதிப்படி கட்டப்பட்ட ஒரு ஆலயத்தை நிர்மாணித்து உள்ளார் . தினமும் பூஜைகள் , சத்சங்கம் எனவும் , அன்னதானமும் நடைபெறுகின்றன
நன்றி சாந்திப்பிரியா
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.