பிராண பிரதிருஷ்டை சர்ச்சை

சுவாரசியமான கால்பந்து பந்தயத்தில் ஒரு அணி கோல் அடித்துவிட்டால் …பந்தயம் முடியும் நேரம் நெருங்க நெருங்க எதிரணியும்அதன் ஆதரவாளர்களும் அழுத்தத்தின் உச்சிக்கே செல்வார்கள் . இன்னும் சிலநிமிடங்களில் மேட்ச் முடிந்து , இன்னொரு அணியின் வெற்றி உறுதி செய்யப்படுவதை அவர்களால் ஜீரணிக்கவே முடியாது…எதாவது நடந்து பந்தயம் நிறுத்தப்படாதா என்றுகூட யோசிப்பார்கள்.

ஐரோப்பாவில் சில மேட்ச்களில் வெளியிலிருந்து மொத்த பார்வையாளர்களும் மைதானத்தின் உள்ளே புகுந்து ரணகளம் செய்து மேட்சை நிறுத்திய சம்பவங்களும் நடந்திருக்கிறது .

அப்படி ஏதாவது செய்து ராமர் ஆலயத்தின் பிராணபிரதிருஷ்டையை நிறுத்த முயற்சிக்கிறது காங்கிரஸ் .

அவர்கள் கிளப்பி விட்ட வதந்திகள்

பூரி

சிருங்கேரி

துவாரகா

உத்தராகண்ட்

ஆகிய நான்கு சங்கராச்சாரியர்களும் அயோத்தி ஆலயத்துக்கு மோடி பிராண பிரதிஷ்டை செய்வதை எதிர்ப்பதாகவும்,

ஆலய கட்டுமானங்கள் முடியாமல் இந்த சடங்கு நடத்தப் படுவதாகவும், அப்படி செய்யக்கூடாது என்றும் கிளப்பி விடுகிறார்கள் .

உண்மை என்ன தெரியுமா?

சங்கராச்சாரியர்கள் சாதாரணமாக பார்வை யாளர்களாக நிகழ்ச்சிகளுக்குச் செல்ல மாட்டார்கள் . அவர்கள் ஆச்சாரியர்கள் …

அந்த பின்னணியில்தான் ” நான் அயோத்தி செல்ல வில்லை .அங்கு சென்று கைதட்டவா முடியும் ” என்றார் பூரி சங்கராச் சாரியார் .

செய்திகள் வெளியிடும் போது அதை திரித்து, சங்கராச்சாரியார் இண்டி கூட்டணியின் உறுப்பினர்போல- மோடியை அவர் தாக்கியதாக செய்தி வெளியிட்டதுடன், அதில் சம்பந்தமில்லாத உத்தராகண்ட், சிருங்கேரியையும் சேர்த்துவிட்டார்கள் .

வேறு வழி இல்லாமல் சிருங்கேரி, உத்தராகண்ட் சங்கராச்சாரியார்கள் மறுப்பு அறிக்கை வெளியிட்டனர்.

கூடவே காஞ்சி மற்றும் சிருங்கேரி சங்கராச் சாரியார்கள் ” மக்களின் பிரதிநிதியான மோடி பிராண பிரதிஷ்டை செய்ய சகல தகுதிகளும் படைத்தவர் ” என்றும் ” எந்த சாஸ்திரமும் அதைத் தடுக்கவில்லை ” என்றும் அறிக்கை வெளியிட்டனர் .

அடுத்து ஆலய கட்டுமானம்.

கோவில் முழுவதாக கட்டி முடிக்காமல் பிராண பிரதிஷ்டா செய்யலாமா என்ற கேள்விக்கு ஜனவரி 22 அன்று பிராண பிரதிஷ்டா என்று நேரம்கணித்த பிரபல ஜோதிடர் ஸ்ரீ ஞானேஸ்வர் சாஸ்திரி சொல்வது ….

பிரதிஷ்டை இரண்டு வகையில் செய்யலாம் .

1.மொத்த ஆலய கட்டுமானமும் முடிந்தபின்
2.பகுதி முடிந்த பின்

மொத்த ஆலயமும் முடிந்தபின் பிராண பிரதிஷ்டை செய்தால், அதன்பின் ஒரு சன்னியாசி ஆலய கோபுரத்தில் கலசத்தை வைக்கவேண்டு.ம் .சன்னியாசி அல்லாதவர் அதைச்செய்தால், கலசத்தின் சக்தி அதைச் செய்தவர் இறந்ததும் மறைந்துவிடும் .

ஆலயத்தின் பகுதி முடிந்தபின் பிராண பிரதிஷ்டை செய்யலாம் .பின்னர் முழுவதும் முடிந்தபின் நேரம் பார்த்து கலச பிரதிஷ்டை செய்யலாம்.

வாஸ்து சாஸ்திரப்படி கிருக பிரவேசம் என்பது கட்டிடத்தில் எதாவது ஒருதளம் முடிந்தபின் செய்யலாம். வாஸ்து பிரவேசம், பிராமண போஜனம் இந்தகட்டத்தில் செய்யலாம் .அதே விதிமுறைகள்தான் ஆலயத்துக்கும்.

பிரபல சிவாலஜி எழுத்தாளர் அமிஷ் திரிபாதி சொல்கிறார் :

என்னுடைய தாத்தா பனாரசில் படித்து அங்கயே வேதகாரியங்கள் செய்பவர். அவரிடமிருந்து நான் அறிந்தது ஆலயத்தில் மூன்று தொடக்க பூஜைகள் செய்வார்கள் .

கர்ப்ப கிரக தொடக்க வேலை ,
கர்ப்பகிரகம் முடிவு
அதன் பின் பிராண பிரதிஷ்டை
செய்யலாம்.

கோவில் முடியும்வரை காத்திருக்க முடியாது. சிலஆலயங்கள், கைலாச மஹாதேவ ஆலயம் போல, கட்டி முடிய நூறு ஆண்டுகள்கூட ஆகி இருக்கிறது . அதுவரை காத்திருக்க மாட்டார்கள் .தேவை இல்லை .

பங்கஜ் சக்சேனா என்ற கலாச்சார ஆய்வு அமைப்பின் தலைவர் சொல்கிறார் : ஆலயம் என்பது கர்ப்பகிரகத்தை சுற்றி கட்டப்படுவதுதானே அல்லாமல் கோவில் எழுந்தபின் வருவதல்ல கர்ப்பகிரகம்..எனவே கர்ப்ப கிரகம் தயாரானதும் எப்போது வேண்டுமானாலும் பிராண பிரதிஷ்டை
செய்யலாம்.

அப்படி பிராண பிரதிஷ்டை முன்பே செய்யபட்ட ஆலயங்களின் பட்டியலை கொடுத்த சக்சேனா, மாதேஸ்வர ஆலயத்தை உதாரணமாக சொல்லி விட்டு இன்னொரு சுவையான லாஜிக்கான விபரமும் சொல்கிறார்…

சில ஆலயங்களில் கற்பகிரக விக்கிரகம் மிக பெரிதாக இருக்கும்..அவற்றை கட்டிடம் கட்டி கதவுகள் வைத்தபின் உள்ளேகொண்டு செல்ல முடியாது..அந்த வகைகளில் விக்கிரகம் முன்பே பிரதிஷடை செய்யப்படும்..மாதங்கேஸ்வர் ஆலயம் அதற்க்கு ஒரு உதாரணம் .

பாஸ்கரேஸ்வர ஆலயம் புவனேஸ்வர் ஸ்ரீ உலகாண்ட பெருமாள் கோவில்
சில மலையை குடைந்து மலையே விக்கிரகமாக மாற்றிய ஆலயங்களும் இதற்கு உதாரணங்கள்

தற்போது முடிவடைந்து, பக்தர்கள் வழிபடும் பல கோவில்களிலும் பிராணபிரதிஷ்டை கோவில் முடியுமுன்னே நடந்ததுதான்.

 

ஜெய் ஸ்ரீராம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கி ...

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் – சிவராஜ் சௌகான் நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் என ஜனாதிபதி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பிரதமர் மோடி ஆலோசனை காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை L -முருகன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்த ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்துழைப்பை வேளாண்மை துறையில் அதிகரிக்க முடிவு இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுக ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள் தொகுப்பு 1 நூல்களை சிவராஜ் சௌகான் வெளியிட்டார் "நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள்" தொகுப்பு 1 (Wings to ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுத ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் -அண்ணாமலை ‛‛திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...