நாட்டின் ஆயிரக்கணக்கான வரலாற்றை உண்மையுடன் எழுதுங்கள் – அமித்ஷா

“நம் நாட்டின் வரலாற்றை முகலாயர் காலத்தில் இருந்து ஆங்கிலேயர் காலம் வரைக்குமாக சுருக்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம் வரலாற்றை உண்மைகளுடன் எழுதி, பெருமையுடன் உலகிற்கு முன்வைக்க வேண்டும்,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசு நிறுவனமான ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ சார்பில் ‘ஜம்மு – காஷ்மீர் அண்ட் லடாக் த்ரூ த ஏஜஸ்’ என்ற வரலாற்று புத்தகம் டில்லியில் வெளியிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தில், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கின் வரலாறு படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகிலேயே கலாசாரத்தினாலான எல்லைகளை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் ஒடிசா வரையிலும் கலாசாரத்தின் காரணமாக நாம் இணைந்துள்ளோம். நாடுகளை புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களால், நம் நாட்டை பற்றி வரையறுக்க முடியாது.

 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, காஷ்மீர் மற்றும் ஜீலம் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் உள்ளன. எனவே, காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. சட்டத்தைப் பயன்படுத்தி அதைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சட்டத்தையே நீக்கிஉள்ளோம்.

ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காக எழுபட்ட இந்திய வரலாற்றில் முகலாயர்கள் காலம் முதல் ஆங்கிலேயர்கள் காலம் வரையிலான சில நுாறு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. இந்திய வரலாற்றாசிரியர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம் வரலாற்றை உண்மைகளுடன் எழுதி உலகத்தின் முன் பெருமையுடன் முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...