இதயத்தைக் கவர்ந்தது இந்தியா-அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி

”இந்தியா என் இதயத்தைக் கவர்ந்துள்ளது,” என்று அமெரிக்க துாதர் எரிக் கார்செட்டி கூறினார்.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கான விருந்தினர் பட்டியல் குறித்து எனக்குத் தெரியாது.

இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் டொனால்டு டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு, முதலில் வாஷிங்டனிலும், அதன் பின்னர் இந்தியா குவாட் உச்சி மாநாட்டை நடத்தும்போதும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு கார்செட்டி கூறினார்.

‘டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அழைக்கப்படுவாரா’ என்ற கேள்விக்கு பதிலளித்த கார்செட்டி, ‘அதைப் பற்றி என்னால் பேச முடியாது. அழைப்புகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ”பிரதமர் மோடியும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பும் நெருக்கமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் நேரடியாக சந்திக்கும் நிகழ்வுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

”இது என் வாழ்க்கையின் மிக அசாதாரணமான வேலை. சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான உறவில் இருப்பது பற்றியது தான் எனது வேலை.

”அடுத்த வாரம், பெங்களூருவில் ஒரு புதிய துணைத் தூதரகத்தைத் திறக்கவுள்ளோம். தனிப்பட்ட முறையில், இந்தியா என் இதயத்தைக் கவர்ந்துள்ளது,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...