பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா சேவை இல்லை; விரைவில் துவங்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இன்று (ஜன.,17) அமெரிக்காவின் துணை தூதரகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி மற்றும் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: பெங்களூரு ஒரு முக்கியமான இடம். இங்கு அமெரிக்கா தூதரகம் வேண்டும் என எரிக் கார்செட்டியிடம் கோரிக்கை விடுத்து இருந்தேன். தற்போது தூதரகம் திறக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நமது தூதரகம் திறக்கப்பட உள்ளது, என்றார்.
நிகழ்ச்சியில் அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி பேசியதாவது: பெங்களூருவில் துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்பது ஜெய்சங்கரின் எண்ணம். இந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. விசா சேவைகள் உடனடியாக வழங்கப்படாது, ஆனால் விரைவில் விசா சேவை துவங்கும்.
எல்லோரும் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அதிக சுற்றுலாப் பயணிகளையும், மாணவர்கள் வருகையை பார்க்க விரும்புகிறோம். விரைவில் விசா சேவையை கொண்டு வர முயற்சிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |