திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழில் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: நமது நாட்டின் மிகச்சிறந்த தத்துவஞானிகள், புலவர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரைத் திருவள்ளுவர் தினத்தில் நாம் நினைவுகூர்வோம். அவர் இயற்றிய திருக்குறள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது.
அவரது போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் அவரது படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. பலவகையான பிரச்சனைகள் குறித்து ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. நமது சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் தொடர்ந்து கடினமாகப் பணியாற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து கவர்னர் ரவி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும்,மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார்.
பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார்.
இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும்.
திருவள்ளுவரின் சிறந்த பக்தர் பிரதமர் மோடிக்கு நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன. இவ்வாறு கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |