வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் லட்சியங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது என அவரது நினைவு தினத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
காந்தியின் 78வது நினைவுதினத்தையொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காந்தியின் நினைவுத் தினத்தில் அவருக்கு அஞ்சலிகள். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அவரது லட்சியங்கள் நமக்கு உத்வேகம் அளிக்கிறது.
நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |