பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக் கிழமை(டிச.25) 96 ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களிடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள நிலையில், 95 ஆவது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் சிறுமின்-புத்தகத்தை வாசித்து மகிழுங்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொருமாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை மனதின்குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதில் அந்த மாதம் நிகழ்ந்தமுக்கிய நிகழ்வுகள், சாமானிய மக்களின் சாதனைகள், நாட்டில் சிறப்பாக செயல் படுத்தப்படும் திட்டங்கள் உள்பட பல்வேறு கருத்துகளை பிரதமா் பகிா்ந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை (டிச.25) காலை 11 மணிக்கு மனதின்குரல் அகில இந்திய வானொலி நிகழ்ச்சிமூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இது 96 ஆவது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஆகும்.
இந்நிலையில், கடந்தமாத மனதின் குரல் நிகழ்ச்சியின் அடிப்படையில் ஒரு சிறுமின்-புத்தகத்தைப் பகிர்ந்துள்ளேன் வாசித்துமகிழுங்கள் என்று மோடி கூறியுள்ளார்.
அவா் சனிக்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உலகளாவிய நன்மை மற்றும் உலகநலனில் கவனம் செலுத்த ஒரு பெரிய வாய்ப்பு, விண்வெளித்துறையில் நமது தொடர் வெற்றி, இசைக்கருவிகளின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கடந்த மாத ‘மன் கி பாத்’ (நவம்பர் 2022) நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான தொகுப்பை உள்ளடக்கிய ஒரு சிறுமின்-புத்தகத்தை பகிர்ந்துள்ளேன் வாசித்து மகிழுங்கள்.” என்று கூறியுள்ளார்.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |