‘உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பதில், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை’ என பிரதமர் மோடி பேசினார்.
117வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது. 2025ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அன்று, நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி, 75 ஆண்டுகள் நிறைவு அடைகிறது.
நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மரபுடன் இணைக்க ஏதுவாக, http://Constitution75.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தை பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் குழந்தைகள் பார்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகிலேயே தொன்மையான மொழி தமிழ். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. உலக நாடுகளில் தமிழ் மொழியை கற்று கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாத இறுதியில் பிஜியில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில், இதுவே முதல் முறை. ஜனவரி 13ம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
தென் அமெரிக்காவில் பராகுவே என்றொரு நாடு உள்ளது. அங்கு வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்காது. பராகுவேயில் ஒரு அற்புதமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பராகுவேயில் உள்ள இந்திய தூதரகத்தில், ஆயுர்வேத ஆலோசனை வழங்கப்படுகிறது.
ஆயுர்வேத அடிப்படையிலான ஆலோசனைகளைப் பெற ஏராளமான உள்ளூர் மக்கள் ஆவலுடன் வருகின்றனர். இந்திய கலாசாரம் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி வருகிறது. சில வாரங்களுக்கு முன், எகிப்தில் இருந்து, 23,000 மாணவர்கள் இந்திய கலாசாரம் தொடர்பான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |