திமுகவும், காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – அண்ணாமலை

”கச்சத்தீவை கொடுத்ததற்கு தி.மு.க.,வும் காங்கிரசும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்க வேண்டும்”, என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அப்பகுதி மக்கள் இன்று இரவு நம்மதியாக தூங்கப் போகின்றனர்.

5,300 ஆண்டுகளுக்கு முன் இரும்பு பயன்பாடு தமிழகத்தில் இருந்தது என்ற ஆதாரத்தை முதல்வர் முன்வைத்துள்ளார். இது ஒவ்வொரு தமிழனுக்கும் சந்தோசமான விஷயம். தமிழனாக பெருமைப்பட்டு கொள்வோம்.

திருப்பரங்குன்றம் முருகனின் ஸ்தலம். ஆண்டாண்டு காலமாக எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும் ஸ்தலம். 1931ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு தெளிவாக உள்ளது. தி.மு.க., தூண்டுதலின் பேரில், எம்.பி., நவாஸ் கனி பிரச்னையை உருவாக்குகிறார். திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து பா.ஜ., பெரிய இயக்கத்தை நடத்தும்.ஒரு எம்.பி., மதமோதலுக்கு காரணமாக இருக்கிறார். மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது முட்டாள்தனமானது. நாட்டின் எல்லையை திருத்துவதற்கு அரசியலமைப்பின் முதலாவது சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், செய்யவில்லை. கச்சத்தீவை கொடுத்ததினால், இந்தியாவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒன்றும் கிடைக்கப்போவதும் இல்லை. ஒப்பந்தம் போட்ட போது முதலில் அங்கு மீனவர்கள் வலையை உலர்த்திக் கொள்ளலாம் என நாடகம் போட்டனர். பிறகு அதனை ரத்து செய்துவிட்டனர்.கச்சத்தீவை கொடுத்ததற்கு தி.மு.க.,வும் காங்கிரசும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவு குறித்து பிரதமர் பேசுகிறார் என்றால், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாக நிற்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால், பிரதமர் பேச மாட்டார்.

நாங்கள் ஈ.வெ.ரா.,கொள்கையை ஏற்கவில்லை என்றாலும் அவரை அவமானப்படுத்த மாட்டோம். மக்கள் அவரை மறந்து விட்டனர். புது தலைமுறை வந்துள்ளது. அவர்களின் அரசியல் மொழி வேறு. சீமான் வேறு மாதிரி அணுகுமுறையை கொண்டு உள்ளார்.ஈ.வெ.ரா.,வை தாண்டி எங்கோ சென்றுவிட்டோம். வளர்ச்சி அரசியல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான அரசியல் பேசவே எங்களுக்கு நேரமில்லை.

முதல்வர் நிறைய பொய் பேச ஆரம்பித்து விட்டார். தேர்தல் வர இன்னும் ஒரு வருடம் உள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒரு வருடம் பொய் பேசினார். 3 வருடம் பொய் பேசாமல் இருந்தார். இப்ப பொய் பேசுவதற்கு நேற்று துவங்கிவிட்டார். தேர்தல் வாக்குறுதியை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லாத ஒரு கட்சி தி.மு.க., வெள்ளை அறிக்கை கொடுப்பதில் என்ன பிரச்னை.

வெள்ளை அறிக்கை கொடுத்தால் பிரச்னை தீர்ந்துவிடும். இதை செய்யாதவரை தி.மு.க.,வை மக்கள் நம்ப போவது கிடையாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...