ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது உட்பட, நிலுவையில் இருந்த கொள்கை ரீதியிலான திட்டங்களில் பெரும்பாலானவற்றை, கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
ஹிந்துக்கள், சொந்த நாட்டில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த தயங்கிய காலம் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறியுள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
முத்தலாக் ஒழிப்பு, பொது சிவில் சட்டம் அமல் போன்ற நிலுவையில் இருந்த கொள்கை ரீதியிலான திட்டங்கள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசுகள் தொடத் தயங்கிய பணிகளை, மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது.
தொடர்ச்சியான இந்த மூன்றாவது ஆட்சியிலும் அதே பாதையில் தொடர்வோம். இதுபோன்ற கண்காட்சி வாயிலாக, சேவை மனப்பான்மை உடைய ஹிந்து அமைப்புகளை ஒரே குடையின் கீழ் இணைத்துள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |