அம்பேத்கர் விரும்பியது இதைத்தான்

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப் பட்டதை, உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதனால், இந்திய அரசியல மைப்பின் தலைவரான, அம்பேத்கர் விரும்பம் நிறைவேறி உள்ளது.

இந்த சட்டம் உருவான போது, நான் கல்லுாரி மாணவனாக இருந்தேன். இதுகுறித்து வெளியான செய்தித்தாள் தகவல்கள், தலைவர்களின் கருத்துக்கள் என்னிடம் உள்ளன.

மேலும், இதுகுறித்து எழுதப்பட்ட புத்தகங்களில் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் தான் நான், ‘370 சட்டத்திருத்தம்’ என்ற நுாலை எழுதினேன்.

இந்த சட்டப்பிரிவு, ஜம்மு – காஷ்மீருக்கு தனி நாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கும் வகையில், பல்வேறு சலுகைகளை வழங்கியது.

எனினும், அந்த மண்ணில் வளர்ச்சிக்கு பதில், வன்முறை தான் வளர்ந்தது. இதை, முன்பே சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், ஷேக் அப்துல்லாவிடம் கூறினார்.

அதாவது, தனி அந்தஸ்து தொடர்பாக, அப்போதைய பிரதமர் நேருவிடம் ஷேக் அப்துல்லா கோரினார். அதை, அரசியலமைப்பு வரைவு குழு தலைவராக இருந்த அம்பேத்கரிடம் கூறும்படி நேரு கூறினார்.

ஷேக் அப்துல்லாவின் கருத்துக்களை கேட்ட அம்பேத்கர், ‘நீங்கள் நேருவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்குகிறீர்கள். ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, காஷ்மீரை இந்தியாவின் முக்கிய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்துகிறீர்கள். இதன் விளைவாக, அங்கு தொழில்துறை வளர்ச்சியோ, வேலை வாய்ப்புகளோ இருக்காது.
துரோகம்

‘இந்திய அரசு, உங்கள் எல்லைகளை பாதுகாக்க வேண்டும். உங்களுக்கு சாலை வசதியில் இருந்து அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என்று கூறும் நீங்கள் தான், இந்திய அரசின் சட்ட வரம்புக்குள் அடங்காத அதிகாரத்தையும், இந்திய மக்களுடன் ஒன்றாத உரிமைகளையும் கோருகிறீர்கள்.

‘அதற்கு ஒப்புதல் அளித்தால், இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நான் துரோகம் செய்ததாகி விடும். அந்த துரோகத்தை, சட்ட அமைச்சராக நான் செய்ய மாட்டேன்’ என்றார்.

இதை, சென்குப்தா, ‘இந்தியாவை காப்பாற்றிய மனிதன்’ என்ற நுாலில் பதிவு செய்துள்ளார். இதன்பின் அவர் நேருவிடம், அம்பேத்கர் பற்றி முறையிட்டார். அரசியலமைப்பு வரைவு குழுவின் உறுப்பினராக இருந்த என்.கோபாலசாமி அய்யங்காரிடம், ஷேக் அப்துல்லாவை அனுப்பினார் நேரு.

ஜம்முவை பற்றி நன்கறிந்தவர் என்பதால், அதன் நன்மை, தீமைகளை கோபாலசாமி அறிவார் என்று நேரு நினைத்தார்.

பின், கோபாலசாமி, ‘306 ஏ’ என்ற வரைவு விதியை உருவாக்கினார். அதுவே பின்னர், சட்டப்பிரிவு 370 ஆனது. அது, 1947 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் உருவாக்கப்பட்டது.

இதையறிந்த வல்லப பாய் படேல், நேருவின் முன் விவாதித்து, நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமான அம்சங்களை நீக்கி, வரைவை உருவாக்கினார்.

பின், ஐ.நா., சபை கூட்டத்தில் பங்கேற்க, நியூயார்க் சென்றார் நேரு. இந்த நேரத்தில், ஷேக் அப்துல்லா, என்.கோபாலசாமியை சந்தித்து, அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட பிரிவுகளில், சில திருத்தங்களை செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டது. அங்கு அது, துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது.

இதையடுத்து, நேருவிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட போது, படேலிடம் விளக்கி, அவரை சமாதானம் செய்து, சட்ட வரைவு, ‘306ஏ’ நிறைவேற்றும்படி கூறினார்.

படேலோ மிகுந்த கோபமடைந்தார். மற்ற, 565 சமஸ்தானங்களுக்கான அங்கீகாரத்தையே, ஜம்மு – காஷ்மீருக்கும் வழங்கி, இந்தியாவுடன் இணைப்பதே நியாயம் என்றார் படேல். ஆனாலும், நேருவின் கருத்துக்களை மறுக்க முடியாமல், எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து, என்.கோபாலசாமி அய்யங்கார் மீது கல்வீச்சு நடந்தது. என்றாலும், படேல், நேரு ஒப்புக்கொண்ட வரைவுக்கு அப்பாற்பட்டு, திருத்தப்பட்ட வரைவு, 1949 அக்டோபர் 17ல், அரசியலமைப்பு சபையில், ‘வரைவு 306 ஏ’ என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டது. அப்போது இதை எதிர்த்து, அம்பேத்கர் வெளிநடப்பு செய்தார்.

அவர் கூறியது போலவே, அந்த சட்டப்பிரிவால், இதுவரை நாடு பல துன்பங்களை அனுபவித்தது.

இந்நிலையில் தான், உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2019, ஆகஸ்ட் 5ல், ராஜ்யசபாவில், சட்டப்பிரிவு 370ஐ, ரத்து செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

அதை, தற்போது உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்து, சட்டமேதை அம்பேத்கரின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளது.

‘ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புஅந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு, 370ஐ ரத்து செய்தது செல்லும்’ என, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, தமிழக சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சரும், சுதந்திர போராட்ட வீரருமான டாக்டர் ஹண்டே கூறியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...