எனக்கு இந்திய டி.என்.ஏ – இந்தோனேசியா அதிபர்

டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருந்தில், இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, ‘எனக்கு இந்திய டி.என்.ஏ., உள்ளது’ என பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

டில்லியில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று விருந்து நடந்தது. இந்தோனேசியா அதிபருக்கு மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார்.

சிறப்பு விருந்தில் சுபியாண்டோ பேசியதாவது: சில வாரங்களுக்கு முன்பு, டி.என்.ஏ., சோதனை செய்தேன். அவர்கள் என்னிடம் இந்திய டி.என்.ஏ., உள்ளது என்று சொன்னார்கள். நான் இந்திய இசையைக் கேட்டவுடன், நான் நடனமாடத் தொடங்குகிறேன். இந்தியாவும், இந்தோனேசியாவும் நீண்ட, பழமையான வரலாற்றில் ஒற்றுமை உள்ளன.

எங்களிடம் நாகரீக ஒற்றுமை உள்ளன. இப்போதும் கூட நமது மொழியின் மிக முக்கியமான பகுதி சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. இந்தோனேசியாவின் பல பெயர்கள் சமஸ்கிருதம் மொழியில் உள்ளன. இது நமது பண்டைக்கால ஒற்றுமை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அவரது பேச்சு சிரிப்பலையை வரவழைத்தது. இந்த விருந்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொழில் முனைவோர்களுக்கு வாக்கு ...

தொழில் முனைவோர்களுக்கு வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும் – அண்ணாமலை இதனை அடுத்து, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 29 ...

இந்தியாவுடன் நல்ல உறவு -ட்ரம்ப் ...

இந்தியாவுடன் நல்ல உறவு -ட்ரம்ப் பெருமிதம் இந்தியா உடன் நல்ல உறவு உள்ளது. பிப்ரவரியில் பிரதமர் ...

மஹா கும்பமேளாவில் புனித நீராடி ...

மஹா கும்பமேளாவில் புனித நீராடிய அமித்ஷா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ...

உலக அமைதிக்காக இணைந்து செயல்பட ...

உலக அமைதிக்காக இணைந்து செயல்பட உறுதி – மோடி மற்றும் ட்ரம்ப் உரையாடல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், பிரதமர் மோடி போனில் ...

இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கா ...

இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கான சக்தி – பிரதமர் மோடி பெருமிதம் 'இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து ...

பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி சம ...

பிரதமர் மோடியின் நெகிழ்ச்சி சம்பவம் – அனைவருக்கும் எடுத்துக்காட்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது ராஜ பாதையில் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...