சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்தில் கைதான ஞானசேகரன் அலைபேசியில் யாரிடம் பேசினார் என்றவிபரங்கள் என்னிடம் உள்ளது. போலீஸ் வெளியிடவில்லை என்றால் நானே வெளியிடுவேன் என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் கைதான ஞானசேகரன் அலைபேசியில் யாரிடம் பேசினார் என்ற விபரம் என்னிடம் உள்ளது.
அதை போலீசார் வெளியிட வேண்டும். இல்லையென்றால் நானே வெளியிடுவேன். அதை சட்டத்திற்கு புறம்பாகத்தான் பெற்றேன் என்பதும் தெரியும்.
இவ்விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., கசிந்தது தொடர்பாக பத்திரிகையாளர்களின் அலைபேசிகளை பறிமுதல் செய்ததன் மூலம் மாநில அரசின் அச்சம் வெளிப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் அவர்கள் கடமையை செய்தனர். அவர்களை கைது செய்தால் அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ., களம் இறங்கும்.
வழக்கு செலவையும் நாங்களே பார்த்துக்கொள்வோம்.
கொடியேற்றும் பிரச்னையில் பலரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தி.மு.க., கொடி கட்டி பெண்களை துரத்தியவர்களை போலீசார் கைது செய்யவில்லை.
தமிழக போலீசார் புகார் அளிப்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கின்றனர். கோவை குண்டு வெடிப்பு சம்பவம், வேங்கை வயல் விவகாரம், கிழக்கு கடற்கரை சாலை சம்பவங்களில் போலீசார் பொய்யான அறிக்கைகளையே வெளியிடுகின்றனர். சென்னையில் உள்ள சில போலீஸ் அதிகாரிகள் அங்கேயே பணியாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு பொய்யான அறிக்கைகளை தயார் செய்து வெளியிடுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் கூறியது போல் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானமும், மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களும் தான் உண்மை என்றால் அது தொடர்பான வெள்ளை அறிக்கையை மாநில அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார்.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |